வேலை, போலி மின்னஞ்சல் மோசடிகள்: 39 பேர் கைது

வேலை, போலி மின்னஞ்சல் மோசடிகள்: 39 பேர் கைது

1 mins read
f4062799-3614-4ca6-a196-c93fc1ca0420
-

போலி­சார் 39 பேரைக் கைது­செய்­துள்­ள­னர். அவர்களில் 35 பேர் ஆண்­கள். நால்­வர் பெண்­கள். அவர்­க­ளுக்கு வயது 16 முதல் 65 வரை.

அந்­தச் சந்­தே­கப்­பேர்­வ­ழி­கள் வேலை தொடர்­பான மோச­டி­களிலும் சிங்­கப்­பூர் 200வது ஆண்டு நினைவு நாண­யங்கள் தொடர்­பான போலி மின்­னஞ்சல் மோசடி­களி­லும் ஈடு­பட்டு இருக்­கி­றார்­கள் என்று சந்­தே­கிக்­கப்­படு­வ­தாக போலிஸ் தெரி­வித்­தது.

போலி­சார், நவம்­பர் 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தீவு முழு­வ­தி­லும் எடுத்த நட­வடிக்­கை­களில் மொத்­தம் 113 பேர் விசா­ரிக்­கப்­பட்­ட­னர். வேலை தொடர்­பான 900 மோச­டி­கள், $20 மில்­லி­ய­னுக்­கும் அதிக இழப்பை ஏற்­ப­டுத்தியுள்ள போலி மின்னஞ்சல் மோச­டி­கள் தொடர்­பில் அவர்­கள் விசா­ரிக்­கப்­பட்ட தாக போலிஸ் கூறி­யது.

கைதா­ன­வர்­கள் போக எஞ்­சிய 74 பேரி­டம்­ தொ­டர்ந்து விசாரணை நடக்­கிறது. மோச­டிப் பேர்­வ­ழி­க­ளி­டம் சிக்­கிய அப்­பாவி­கள், குற்­றக் கும்­பல்­க­ளி­டம் தங்­கள் வங்­கிக் கணக்குகளை விலைக்குக் கொடுத்து இருக்­கிறார்­கள் அல்­லது சிங்­பாஸ் விவ­ரங்­க­ளைத் தெரி­வித்து இருக்­கிறார்­கள் என்று கூறப்­ப­டு­கிறது.