பிரதமர்: நம்பிக்கையே நமது தனித்துவம்

பிரதமர்: நம்பிக்கையே நமது தனித்துவம்

2 mins read
48012478-3011-4b34-be70-422eb438155c
-

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றைச் சிங்­கப்­பூர் கையா­ளும் முறை­யில் சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் மக்­கள் செயல் கட்சி அர­சாங்­கத்­திற்­கும் பொதுமக்­க­ளுக்­கும் இடைப்­பட்ட நம்­பிக்கை, மற்ற நாடு­க­ளின் நடை­முறை­யில் இருந்து தீர்க்­க­மாக வேறு­பட்ட அணு­கு­மு­றை­யாக இருக்­கிறது என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­தார்.

கொவிட்-19 உல­கம் முழு­வ­துமே சமூ­கங்­க­ளைப் பொறுத்­த­வரை, பொது நம்­பிக்­கை­யைச் சோதிக்­கும் ஒன்­றாக ஆகி இருக்­கிறது என்று மக்­கள் செயல்­கட்சி மாநாட்­டில் ஆற்­றிய உரை­யில் திரு லீ குறிப்­பிட்­டார். அமெ­ரிக்கா, ஐரோப்­பா­வை­விட சிறந்த மருத்­து­வர்­களோ, விஞ்­ஞானி­களோ, சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு முறையோ சிங்­கப்­பூ­ரில் இருப்­ப­தா­கக் கூற முடி­யாது.

இருந்­தா­லும் நாம் ஒரு­வர் மற்­றொ­ரு­வரை நம்­பு­கி­றோம். ஆகையால் ஒரு­வர் மற்­றொ­ரு­வரை எதிர்த்து செயல்­ப­டா­மல் ஒரு­வர் மற்­றொ­ரு­வ­ரு­டன் சேர்ந்து செயல்­படு­கி­றோம். இதுவே நம்­மு­டைய தீர்க்­க­மான, திட்டவட்டமான வேறு­பட்ட அணு­கு­முறை­யாக இருக்­கிறது என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூர் அதிக நம்­பிக்­கை­மிக்க சமூ­க­மாக இருக்­கிறது. எப்­போ­துமே அது இப்­ப­டியே இருந்து வர­வேண்­டும் என்று சன்­டெக் சிங்­கப்­பூர் மாநாடு மற்­றும் கண்­காட்சி நிலை­யத்­தில் கட்சி உறுப்­பி­னர்­கள், தொண்­டர்­க­ளி­டையே நேற்று உரை­யாற்­றிய திரு லீ தெரி­வித்­தார்.

"நாம் எப்­போ­துமே ஒரு­வர் மற்­றொ­ரு­வ­ரி­டம் நம்­பிக்­கை­யோடு இருந்து வர­வேண்­டும்.

"கொவிட்-19 தொற்றை மட்­டு­மன்றி எதிர்­கா­லத்­தில் ஏற்­ப­டக்­கூடிய எல்லா புயல்­க­ளை­யும் சமா­ளிப்­பதற்கு இது அவ­சி­யம்," என்று திரு லீ கூறி­னார்.

பிணைப்­பு­மிக்க சமூ­கத்தை உரு­வாக்கி பலப்­ப­டுத்­து­வ­தற்குப் பல காலம் பிடிக்­கும் என்று தெரி­வித்த திரு லீ, அதை எந்­த­வொரு நெருக்கடிக்கும் முன்­பா­க­வே சாதிக்க வேண்டும் என்­றார்.

மக்­க­ளின் நம்­பிக்­கை­யைக் கொண்­டி­ருப்­பது மசெக அர­சாங்­கத்­தின் பெரும் பேறு என்­றும் அவர் கூறி­னார். இதன் கார­ண­மாக சரி­யான காரி­யத்­தைச் செய்ய முற்­படும் போதும் அர­சி­யல் தலை­வர்­கள் தொடர்ந்து மக்­க­ளின் நம்­பிக்­கை­யைப் பேணி வளர்க்க வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தினார்.

கொவிட்-19க்கு எதி­ராக சிங்­கப்­பூர் எடுத்­து­வ­ரும் நட­வ­டிக்­கை­கள் பல­ன­ளிப்­ப­தற்கு மசெக அர­சாங்­கத்தை மக்­கள் நம்­பு­வது ஒரு முக்­கிய கார­ணம் என்று தனது உரை­யில் திரு லீ குறிப்­பிட்­டார்.

நம்­பிக்­கை­யைப் பேணி வளர்க்க வேண்­டும் என்­றால் தலைவர்கள் எடுத்­துக்­காட்­டா­கத் திகழ வேண்டி­யது மிக முக்­கி­ய­மா­னது என்­பதை வலி­யு­றுத்­திய பிர­த­மர், ­ஒரே விதி எல்­லா­ருக்­கும் பொருந்­தும் என்­று தெரிவித்தார்.

தலை­வர்­கள் தங்­க­ளு­டைய அதி­கா­ரங்­க­ளைத் தவ­றா­கப் பயன்­படுத்­து­வ­தால் எல்­லாம் தவ­றா­கி­வி­டு­கின்ற, பொது­மக்­கள் நம்­பிக்கையை இழக்­கின்ற, அர­சாங்கத்­தின் நம்­ப­கத்­தன்மை சிதைந்­து­விடக்­கூ­டிய சூழலை வேறு இடங்­களில் நாம் கண்­டி­ருக்­கி­றோம் என்­பதை சுட்­டிக்­காட்­டிய திரு லீ, அதி­கா­ரி­களும் தலை­வர்­களும் ஒரு­போ­தும் தங்­கள் அதி­கா­ரங்­க­ளைத் தவ­றா­கப் பயன்­படுத்­தக்­கூ­டாது என்றார்.

குடி­மக்­கள் என்ற முறை­யில் சிங்­கப்­பூ­ரர்­கள் ஒரு­வர் மற்­றொ­ரு­வர் மீது நம்­பிக்கை கொள்ள வேண்டும் என்ற திரு லீ, சட்­ட திட்­டங்­கள் தேவை என்­றா­லும் அவை போதாது என்று கூறி­னார்.