1,761 பேருக்குத் தொற்று; புதிதாக ஆறு பேர் மரணம்

1,761 பேருக்குத் தொற்று; புதிதாக ஆறு பேர் மரணம்

1 mins read
c7a0751a-e024-4fd1-8972-d6c018a7c29b
-

சிங்­கப்­பூ­ரில் சனிக்­கி­ழமை புதி­தாக 1,761 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­தி­யா­ன­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. அவர்­களை­யும் சேர்த்து கொரோனா கிருமி தொற்­றி­யோரின் மொத்த எண்­ணிக்கை 261,636 ஆகி­யது.

வாராந்­திர தொற்று அதி­க­ரிப்பு விகி­தம் சனிக்­கி­ழமை 0.75ஆக இருந்­தது. இந்த அதி­க­ரிப்பு விகி­தம் தொடர்ந்து 15 நாட்­க­ளாக 1க்கும் குறை­வா­கவே இருந்து வரு­கிறது. புதிய வாராந்­திர தொற்று எண்­ணிக்கை குறைந்து வரு­வதை இது காட்­டு­கிறது.

கொரோனா கார­ண­மாக ஆறு பேர் மர­ண­ம­டைந்­த­னர். அவர்­களுக்கு வயது 55 முதல் 82 வரை. மாண்டவர்­கள் அனை­வ­ருக்­கும் பல்­வேறு உடல்­ந­லப் பிரச்­சி­னை­கள் இருந்­தன. கொவிட்-19 மொத்த மரண எண்­ணிக்கை 690 ஆகி உள்­ளது.

புதி­தாகக் கிருமி தொற்­றி­யோரில் 1,689 பேர் சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள். அவர்­களில் 282 பேருக்கு வயது 60 மற்­றும் அதற்­கும் அதி­கம்.

வெளி­நாட்டு ஊழி­யர் விடு­தி­களைச் சேர்ந்­த­வர்­கள் 63 பேர். ஒன்பது பேர் வெளி­நாடு­களில் இருந்து வந்­த­வர்­கள் என்று அமைச்சு தெரி­வித்­தது.

கடந்த இரண்­டு­வார கால­மாக தீவிர சிகிச்­சைப் பிரிவு பய­னீட்டு அளவு குறைந்து வரு­கிறது. ெவள்ளிக்­கி­ழமை இந்த அளவு 56.6% ஆக இருந்­தது.