‘சொல்வதற்கேற்ப அரசியல்வாதிகள் நடந்துகொள்ள வேண்டும்’

அர­சி­யல் தலை­வர்­களும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் நாடா­ளு­மன்­றத்­திற்கு உள்­ளே­யும் வெளியே யும் சொல்­வ­தற்கு ஏற்ப நடந்­து­கொள்ள வேண்­டும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் மக்­கள் செயல் கட்சி மாநாட்­டில் வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

சிங்­கப்­பூர் அர­சி­யல் நேர்­மையை மிக முக்­கி­ய­மா­கக் கரு­து­வதாகவும் அத­னால் நற்­ப­யன்­கள் ஏற்­பட்டுள்ள தாகவும் திரு லீ தெரி­வித்­தார்.

அர­சி­யல்­வா­தி­கள் நேர்­மை­யற்ற முறை­யில் நடந்­து­கொண்­டால் வாக்­கா­ளர்­கள் அவர்­க­ளின் நோக்­கத்தை நம்ப முடி­யா­மல் போய்­வி­டும். அத்­தகைய அர­சி­யல்­வா­தி­கள் சொல்­வதை மக்­கள் நம்­ப­மாட்­டார்­கள் என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

மக்­கள் செயல் கட்சி 1959ல் அதி­கா­ரத்­துக்கு வந்­த­துமே கடுமை­யான தரங்­களைக் கட்சி நிலை­நாட்டி வந்­தி­ருக்­கிறது என்­பதை திரு லீ சுட்­டிக்­காட்­டி­னார். இது அமைச்­சர்­கள், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், கட்­சித் தொண்­டர்­கள் அனை­வ­ருக்­கும் தெரி­யும் என்­றார்.

மசெ­க­வின் உறு­தி­யான நிலைப்­பாடு இங்கு அர­சி­ய­லுக்கு உரு­வம் கொடுக்­கிறது. இதே­போன்ற நேர்­மை­யான உயர்­த­ரம், அர­சி­ய­லில் எத்­த­ரப்­பி­லும் ஈடுபடும் ஒவ்­வொ­ரு­வ­ரி­டத்­தி­லும் இருக்­க­வேண்டும் என்பதை வாக்­கா­ளர்­கள் உறு­திப்­படுத்த வேண்­டும் என்று திரு லீ கூறி­னார்.

இப்­ப­டிச் செய்­ய­வில்லை என்­றால் அது சிங்­கப்­பூர் தன்­னு­டைய தரங்­களைக் குறைத்­துக்­கொள்ள ஆயத்­த­மா­கிறது என்­ப­தற்­கான அறி­கு­றி­யா­கவே இருக்­கும் என்­றார் அவர். இதன் முடி­வில் நிர்­வாக முறை பாதிக்­கப்­பட்­டு­வி­டும்.

அர­சி­யல் என்­பது மக்­க­ளின் வாழ்க்கை மற்­றும் எதிர்­கா­லத்தை தீர்­மா­னிப்­பது என்­றாரவர். தொற்று காலத்­தில்­கூட இந்த முறை தொடர்­கிறது என்­பதை சுட்­டிக்­காட்­டிய திரு லீ, கொவிட்-19 தொற்­றைச் சமா­ளிக்க போரா­டும் அதே­நே­ரத்­தில், சமூக ஏற்­றத்­தாழ்வைக் குறைக்க வேண்­டும் என்ற முக்­கி­ய­மான இலக்கை நிறை­வேற்­ற­வும் நாடு பாடு­ப­டு­கிறது என்­றார்.

சமூ­கப் பிணைப்­பைப் பலப்­ப­டுத்­து­வ­தற்­கான தனது முயற்­சி­களை சிங்­கப்­பூர் பல­ம­டங்­காக்­கு­வ­தா­க­வும் அவர் கூறி­னார். நல்ல கொள்கைகள் மட்­டும் போது­மா­னது அல்ல என்று கூறிய அவர், அர­சாங்­கத்­தின் கொள்­கை­கள் மக்­க­ளின் வாழ்­வில் எந்த அளவுக்கு வேறு­பாட்­டைச் சாதித்து உள்­ளன என்­பதை மக்­கள் புரிந்­து­கொண்டு அங்­கீ­க­ரிக்க மசெக உதவ வேண்­டும் என்றும் திரு லீ கூறினார்.

தவ­றான கண்­ணோட்­டங்­களை உறு­தி­யான முறை­யில், முடிந்­தால் கண்­ணி­ய­மான முறை­யில் மறுத்து அவற்­றுக்குச் சரி­யான விளக்­கத்தை அளிக்க வேண்­டும் என்­றும் திரு லீ குறிப்பிட்டார்.

சிங்­கப்­பூர்-இந்­தியா விரிவான பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு உடன்­பாடு, வேலை அனு­ம­தி­தா­ரர்­கள் பற்றி செப்­டம்­பர் மாதம் நாடா­ளு­மன்­றத்­தில் 10 மணி நேரம் விவா­தம் நடந்­தது. அப்­போது இத்­த­கைய உணர்­வு­தான் கருத்­தில் கொள்­ளப்­பட்­டது என்­று திரு லீ கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!