ஓமிக்ரான் கிருமி பற்றி அறிய அவசரப் பணிகள் தேவை

ஓமிக்­ரான் என்ற புதிய உரு­மா­றிய கொரோனா கிருமி பற்றி மேலும் பல­வற்றைப் புரிந்­து­கொள்ள உட­ன­டி­யாக ஏரா­ள­மான பணி­களைச் செய்யவேண்டி இருப்ப தாக தொற்றுநோய்களுக்கான தேசிய நிலை­யம் கூறு­கிறது.

ஓமிக்­ரான் அண்­மை­யில்­தான் தலை­தூக்கி இருக்­கிறது என்­றாலும் பிசி­ஆர் பரி­சோ­த­னை­யில் அது பற்றி எப்­ப­டி­யும் தெரிந்­து­விடும் என்று அந்த நிலை­யம் நேற்று மேலும் கூறி­யது.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கேள்வி­களுக்­குப் பதி­ல­ளித்த நிலை­யத்­தின் பேச்­சா­ளர், ஓமிக்­ரான் பற்றி மேலும் பல­வற்றைப் புரிந்­து­கொள்ள ஏரா­ள­மான பணிகளை ­உடனடியாக மேற்கொள்ள வேண்டி இருக்­கிறது என்­றார்.

அந்­தக் கிருமி எவ்­வ­ளவு வேக­மா­கப் பர­வும், தொற்று அறிகுறி எப்­படி இருக்­கும், மருந்­த­கப் பரி­சோ­த­னை­கள், எந்த அள­வுக்­குப் பாதிப்பு இருக்­கும், தடுப்­பூசி மூலம் எந்த அள­வுக்குத் தடுப்­பாற்­றல் ஏற்­படும் உள்­ளிட்ட பல­வற்­றை­யும் பற்றி தெரிந்­து­கொள்ள அவ­ச­ர­மாக பல பணி­க­ளைச் செய்ய வேண்டிய நிலை இருக்­கிறது என்று அவர் விளக்­கி­னார்.

இப்­போது பயன்­ப­டுத்­தப்­படும் பரி­சோ­த­னை­கள் மூலம் ஓமிக்ரான் தொற்று அநே­க­மாக தெரி­ய­வந்து­வி­டும் என்­றும் அவர் கூறி­னார்.

ஓமிக்­ரான் பற்றி மேலும் பல தக­வல்­க­ளைப் புரிந்­து­கொள்ள ஏது­வாக இந்த நிலை­யம் நில­வரங்­க­ளைத் தொடர்ந்து அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரும்.

அனைத்­து­லக ரீதி­யில் பல அமைப்­பு­க­ளோ­டும் சேர்ந்து செயல்­படும் என்­றும் அந்­தப் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

ஓமிக்­ரான் கிருமி கவலை தரக்­கூ­டிய ஒன்று என்று உலக சுகா­தார நிறு­வ­னம் அண்மையில் வகைப்­ப­டுத்தியது. அது புதிய மிரட்டலாகி உள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!