‘இளையர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேளுங்கள்’

இளை­ய­ருக்கு இட­ம­ளித்து அவர்­கள் பல பொறுப்­பு­களில் பங்காற்று ­மாறு செய்­ய­வேண்­டிய தேவை மக்­கள் செயல் கட்­சிக்கு இருப்­பதாக அதன் தலை­வ­ரும் வர்த்­தக தொழில் அமைச்­ச­ரு­மான கான் கிம் யோங் தெரி­வித்­தார்.

மக்­கள் செயல் கட்சி (மசெக) மாநாட்­டைத் தொடங்­கி­வைத்­துப் பேசிய அவர், இன்­னும் சிறந்த நாட்டை தாங்­கள் விரும்­பு­வ­தாக சிங்­கப்­பூ­ரர்­கள் கூறு­கி­றார்­கள் என்­றார். அவர்­களில் பல­ரும் இந்த முயற்­சி­யில் நம்­மு­டன் சேர்ந்­து­கொண்டு சிங்­கப்­பூர் வர­லாற்­றின் அடுத்த அத்­தி­யா­யத்தை எழுத விரும்­பு­கி­றார்­கள் என்று திரு கான் குறிப்பிட்டார்.

“இளை­யர்­களில் பல­ரும் தங்­கள் எதிர்­கா­லத்­தைத் தீர்­மா­னிப்­பதில் பங்­கெ­டுத்­துக்­கொள்ள ஆர்­வ­மாக இருக்­கி­றார்­கள். முன்பு இல்­லா­த­படி அவர்கள் இப்போது அதிக குரல் கொடுக்­கி­றா­ர்கள்.

“இப்­ப­டிப்­பட்ட நிலை­யில் கட்சி­யி­லும் சிங்­கப்­பூ­ரின் முன்­னேற்­றப் பாதையை வகுப்­ப­தி­லும் தங்­களுக்கு இடம் இருக்­கிறது, பொறுப்பு இருக்­கிறது என்ற எண்­ணத்தை அவர்­க­ளி­டம் ஏற்­ப­டுத்த வேண்­டும்,” என்று திரு கான் வலி­யு­றுத்­தி­னார்.

மாநாட்­டில் பேசிய புக்­கிட் தீமா மசெக கிளைச் செய­லா­ளர் கோ ஸி கீ, அடித்­த­ளத்­தைப் பற்றி இன்­னும் சிறப்­பாகப் புரிந்­து­கொள்ள வேண்­டும். செம்மை­யான தக­வல் தொடர்பு இருக்­க­வேண்­டும் என்றார்.

இவற்றை உறு­திப்­படுத்த கண்­ணோட்­டத்­தில் பன்­ம­யம் தேவை என்­றும் கட்­சி­யில் புதுப்­பிப்பு அவசி­யம் என்­றும் அவர் வலி­யுறுத்­தி­னார்.

அங் மோ கியோ குழுத்தொகுதி உறுப்­பி­ன­ரான குமாரி நடியா சாம்­டின், கட்­சி­யும் தொண்­டர்­களும் மற்­ற­வ­ரின் எண்­ணங்­களை, உணர்­வு­க­ளைப் புரிந்துகொள்­வதில் உள்ள தங்­கள் பல­வீ­னங்­களைச் சரிப்­ப­டுத்­திக்கொண்டு, தங்­க­ளுக்கு இணக்­க­மில்லா கருத்­து­களை, கண்­ணோட்­டங்­களை நன்கு புரிந்து கொள்­ளும் போக்­கைக் கடைப்­பிடிக்க வேண்டும் என்று தெரி­வித்­தார். இளை­யர்­க­ளுக்கு மரி­யாதை கொடுத்து அவர்­க­ளின் கருத்­து­களுக்­குச் செவி­சாய்க்க வேண்டும் என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.

பொது ஊழி­யர் ஒருங்கிணைந்த தொழிற்சங்­கத்­தின் தலை­மைச் செய­லா­ளர் சஞ்­ஜிவ் குமார் திவாரி, மக்கள் செயல் கட்­சிக்­கும் தொழிற் கங்கங்­க­ளுக்­கும் இடைப்­பட்ட உறவைப் பலப்­ப­டுத்த வேண்டியதன் முக்­கி­யத்துவத்தை வலி­யு­றுத்­தி­னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!