தொழில்நுட்பப் புரட்சிக்கு 5ஜி திறன் பயிற்சி

தொழில்நுட்பப் புரட்சிக்கு 5ஜி திறன் பயிற்சி

3 mins read
09706eb4-6862-43ea-adec-f4390f054036
வர்த்தகத் துறையில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் பெருகிவருவதாக இளையர் ரமணன் கலைச்செல்வம் கூறுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கி. ஜனார்த்­த­னன்

சிங்­கப்­பூ­ரின் தொலைத்­தொ­டர்­புத் துறை­யில் தற்­போது தலை­தூக்­கி­யுள்ள 5ஜி தொழில்­நுட்­பம், வரும் ஆண்­டு­களில் பல்­வேறு வாய்ப்­பு­களை உரு­வாக்­கித் தரும் என்ற ஊகமே, அதைப் பயி­லும் உந்­து­தலை ரம­ண­னுக்­குத் தந்­தது.

தொழில்­நுட்­பப் பின்­பு­லன் இல்­லாத 31 வயது ரம­ணன் கலைச்­செல்­வம், 5ஜி திறன்­பேசித் தொழில்­நுட்­பத்­தில் கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற 3,000 பேரில் ஒரு­வர்.

தகவல் தொடர்பு, ஊடக மேம்­பாட்டு ஆணை­யத்­தின் 'டெக்ஸ்­கில்ஸ் எக்­செ­ல­ரேட்­டர்' திட்­டத்­தின்­கீழ் சிங்­டெல் நிறு­வ­னம் நடத்­திய 12 மாத 5ஜி பயிற்­சித் திட்­டத்­தில் சேர்ந்­தார். 5ஜி கட்­ட­மைப்­பு­களை இயக்­கு­வது, அவற்றைப் பரா­ம­ரிப்­பது, 5ஜி சேவை­களை உரு­வாக்கு­வது ஆகிய அம்­சங்­களை ரம­ணன் கற்­றுக்­கொண்­டார்.

"5ஜி தொழில்­நுட்­பத்­தால் பல சூழல்­க­ளுக்கு நம்­மால் தீர்வு காண முடி­யும் 5ஜி யுகத்­திற்­கா­கத் தயா­ரா­கும் சிங்­கப்­பூ­ரின் முக்­கிய முயற்சி­யில் அங்­கம் வகித்­தி­ருப்­பதை நினைத்து நான் பெருமை அடை­கி­றேன்," என்று இவர் கூறு­கி­றார்.

சிங்­கப்­பூ­ருக்­குத் தேவைப்­படும் உன்­னத திறன்­களில் ஒன்­றா­னது 5ஜி தொழில்­நுட்­பம். இதன் தொடர்­பில் 2023ஆம் ஆண்­டுக்­குள் 5,000 திற­னா­ளர்­களை உரு­வாக்­கும் திட்­டம் கடந்­தாண்டு அறி­விக்­கப்­பட்­டது.

அர­சாங்­கத்­தின் இந்­தக் குறிக்­கோளை முன்­ன­தா­கவே அடை­யும் சாத்­தி­யம் இருப்­ப­தா­கக் கூறிய தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ, நாட்­டின் மின்­னி­லக்க உரு­மாற்­றத்­திற்கு 5ஜி, செயற்கை நுண்­ண­றிவு போன்ற புதிய தொழில்­நுட்­பங்­களே முக்­கிய படி­கள் என்­றார்.

தற்­போ­தைய 4ஜி தொழில்­நுட்­பத்­தைக் காட்­டி­லும் 10 மடங்கு வேகத்­தில் செயல்­படும் 5ஜி தொழில்­நுட்­பம், 2025ஆம் ஆண்டுக்­குள் சிங்­கப்­பூர் முழு­வ­தும் பயன்­பாட்­டுக்கு வரும் என்று வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் ஆகஸ்ட் மாதம் தெரி­வித்­தார்.

2015ஆம் ஆண்­டில் சிங்­டெல் நிறு­வ­னத்­தில் சேர்­வ­தற்கு முன், நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் வர்த்­த­கத் துறை­யில் பட்­டம் பெற்­ற­வர் ரம­ணன். அதற்கு முன்­ன­தாக அவர் சிங்­கப்­பூர் பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் வர்த்­த­கத் துறை­யில் பட்­ட­யக் கல்வி பயின்­றார்.

சந்­தைப்­ப­டுத்­து­தல் தொடர்­பான பாடத்தை முக்­கி­ய­மாக எடுத்­துப் படித்­து­வந்த போதும் வர்த்­த­கத் துறை­யில் தொழில்­நுட்­பத்­தின் முக்­கி­யத்­து­வம் பெரு­கி­வந்­ததை உணர்ந்­தார்.

வாரத்­தில் மூன்று, நான்கு முறை வகுப்­பு­களும் பயிற்­சி­களும் இருந்­த­தா­கக் குறிப்­பிட்ட ரம­ணன், பணித்­திட்­டம் மற்­றும் தேர்வு அடிப்­ப­டை­யில் மதிப்­பீடு அமைந்­த­தா­கக் கூறி­னார்.

சந்­தே­கங்­க­ளைப் பயிற்­சி­யில் தம்­மு­டன் பங்­கேற்­ற­வர்­கள், தம்­முடைய பயிற்றுவிப்பாளர்கள் ஆகி­யோரி­டம் கேட்­டுத் தெளிவு பெற்­ற­தா­க­வும் இத­னால் மேலும் விரை­வாக தம்­மால் கற்க முடிந்­த­தா­க­வும் ரம­ணன் பகிர்ந்­து­கொண்­டார்.

ஆளில்லா வானூர்­தி­கள், இயந்­திர மனி­தர்­கள் போன்ற தொழில்­நுட்ப அம்­சங்­கள், 5ஜி யுகத்­தில் அன்­றாட வர்த்­த­கத் தேவை­களை நிறைவு செய்­வ­தற்­கான சாத­னங்­களாக விளங்­கும். அத­னால் அவற்­றைக் கொண்டு திட்­ட­மி­டும் ஆற்­றலை இப்­போதே நம்­மி­டையே வித்­திட வேண்­டும் என்று அவர் தெரி­வித்­தார்.

வேலை­யி­டங்­கள் மட்­டு­மின்றி கணினி விளை­யாட்­டு­கள், இணை­யக் காணொ­ளிச் சேவை­கள் மீதும் ஆர்­வ­மி­ருப்­ப­வர்­க­ளுக்கு மேம்­பட்ட தரத்தை 5ஜி வழங்­கு­கிறது என்று கூறி­னார்.

"சந்­தைப்­ப­டுத்­தும் உத்­தி­யாக இணைப்பு நிஜ­மாக்­கம் (Augmented Reality) மாறத் தொடங்­கி­விட்­டன. அவற்றை நாம் வெறும் விளை­யாட்­டாக கரு­தா­மல் வர்த்­தக உத்­தி­களா­க­வும் பார்க்­க­வேண்­டும்," என்று கடந்த ஆறு ஆண்­டு­க­ளாக சிங்­டெல் நிறு­வ­னத்­தில் மேம்­பாட்டு, செயல்­பாட்டு மேலா­ள­ரா­கப் பணி­யாற்­றும் ரம­ணன் தெரி­வித்­தார்.

5ஜி திறன்­க­ளைக் கற்­றுக்­கொள்ள விரும்­பு­வோ­ருக்கு மேலும் பல வளங்­கள் கிடைக்­கப்­பெற உள்­ளன. புதிய பயிற்சி இணை­யத்­தளம் ஒன்றை சிங்­கப்­பூர் 5ஜி, தொலைத்­தொ­டர்பு பயிற்­சிக் கழ­கம் (Singapore 5G and Telecoms Academy) தொடங்­க­வுள்­ளது. சிங்­கப்­பூ­ரின் உயர்­கல்வி நிலை­யங்­களில் நடக்­கும் 500க்கும் மேற்­பட்ட 5ஜி பயிற்சி வகுப்­பு­களில் ஆர்­வ­முள்­ளோர் சேர­லாம்.