கொவிட்-19 : மேலும் 11 பேர் உயிரிழப்பு

புதிய கொவிட்-19 கிருமித்தொற்று எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 28) 747ஆகப் பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை சனிக்கிழமையின்போது 1,761 ஆக இருந்தது.  அத்துடன், 67 வயதுக்கும் 98 வயதுக்கும் இடைப்பட்ட 11 பேர் கிருமித்தொற்று தொடர்பான மருத்துவச் சிக்கல்களால் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. உயிரிந்தோர் அனைவருக்கும் ஏற்கெனவே மருத்துவச் சிக்கல்கள் இருப்பதாக அமைச்சு கூறியது. இந்தச் சம்பவங்களுடன் சிங்கப்பூரின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 701க்கு உயர்ந்திருப்பதாகப் பதிவாகியுள்ளது.

புதிய கிருமித்தொற்றுகளில் 719 சமூகத்தைச் சேர்ந்தவை. ஊழியர் தங்கும் விடுதிகளில் 25 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் மூவர் வெளிநாட்டில் கிருமித்தொற்று இங்கு வந்தவர்கள்.சமூக அளவில் ஏற்பட்ட தொற்றுகளில் 135 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 

சிங்கப்பூரின் மொத்த கிருமித்தொற்று எண்ணிக்கை தற்போது 262, 383 ஆக உள்ளது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!