எஸ்பிஎஸ் டிரான்சிட்டுக்கு எதிரான வழக்கு தொடரும்

எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்துள்ள 13 பேருந்து ஓட்டுநர்களின் சார்பாக வாதாடும் வழக்கறிஞர் லிம் டின், தமது கட்சிக்காரர்கள் வழக்கைத் தொடர்வதாக உயர் நீதிமன்றத்திடம் தெரிவித்தார். 

ஓட்டுநர்களை முன்னதாக பிரதிநிதித்த வழக்கறிஞர் எம் ரவி, நீதிபதி ஆட்ரே லிம் பாரபட்சத்துடன் நடந்துகொள்வதாகவும் அவர் வழக்கிலிருந்து விலகிக் கொள்ளவேண்டும் என்றும் கோரினார். போக்குவரத்து நிறுவனத்தின் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் தவீந்தர் சிங்கைக் கோமாளி என்று கூறி வழக்கிலிருந்து தாமும் தமது கட்சிகக்காரர்களும் விடுபடப்போவதாகத் தெரிவித்தார்.

ஓட்டுநர்கள் சார்பில் வழக்கைத் தொடுத்த ஓட்டுநர் திரு சுவா குவோங் மெங்,  திரு ரவியின் நடத்தையால் மிகவும் வெட்கப்படுவதாக வழக்கறிஞர் லிம் நீதிமன்றத்தில் தெரிவித்தார். திரு ரவியை விலக்கிவிட்டு திரு லிம்மை தமது வழக்கறிஞராக நியமித்த  திரு சுவா, நீதிபதியை மாற்றும் எண்ணம் தம் கட்சிக்காரருக்கு  இல்லை என்று திரு லிம் கூறினார். 

கடந்த புதன்கிழமையன்று தம்மை திரு சுவா நாடியதாகவும் ஓட்டுநர்களைப் பிரதிநிதிக்க தாம் ஒப்புக்கொண்டதாகவும் திரு லிம் கூறினார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!