சிங்கப்பூர் - இரண்டு குடியிருப்புப் பேட்டைகளில் தீ மூட்டியதாகக் நம்பப்படும் 48 வயது ஆடவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். சிராங்கூன் ரோடு அருகில் உள்ள பென்டமியர் ரோட்டில் தீச்சம்பவம் ஏற்பட்டதாக தங்களுக்கு தகவல் வந்ததாக போலிசார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் உதவியுடனும் போலிசாரின் கண்காணிப்புக் கேமராக்களின் உதவியுடனும் போலிசார் அந்த ஆடவரை பின்னிரவு 1.50 மணிக்குப் பிடித்தனர். மெக்னயர் ரோட்டில் அவர் மற்றொரு தீச் சம்பவத்திற்கு காரணமாக இருந்தார் என்றும் நம்பப்படுகிறது.
நாளை அந்த ஆடவர் குற்றம் சாட்டப்படுவார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஏழு ஆண்டு வரை சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்படலாம்.