வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள நிறு வனங்கள், ஊழியர்களின் மருத்து வச் செலவுகளைச் சமாளிப்பதற்கு ஏதுவாக ஆரம்ப சுகாதாப் பராமரிப்புத் திட்டத்தை விரைவில் வாங்க வேண்டியிருக்கும்.அதற்கான கட்டணம், ஒவ்வொரு ஊழியருக்கும் ஆண்டுக்கு தலா 108 வெள்ளியிலிருந்து $145 வரை இருக்கும்.
சிங்கப்பூரின் நான்கு சுகாதாரப் பராமரிப்பு நிறுவனங்கள் இந்தத் திட்டங்களை வழங்கவிருக்கின்றன. கடந்த ஆண்டு புதிய ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்பு பற்றி அறிவிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக அந்த நான்கு சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களுக்கும் ஆறு வட்டார மருத்துவ நிலையங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
“சுகாதாரப் பராமரிப்பு வழங்குவோரிடம் முதலாளிகள் நேரிடையாக ஊழியருக்கான பராமரிப்புத் திட்டத்ைத வாங்கலாம். அதற்கான கட்டணங்களை மாதந்தோறும் தவணை முறையில் செலுத்தலாம்,” என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் தெரிவித்தார்.
ஒர்க் பாஸ் தொடர்பான மருத்துவச் சோதனைகள், மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சை, ஆண்டுதோறும் உடல்நலப் பரிசோதனை, தொலைத்தொடர்பு மருந்து விநியோகம் உள்ளிட்டவற்றுக்கு இந்தப் பணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவர். சிங்கப்பூரில் 250,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
ஊழியர் எந்த இடத்தில் வேலை பார்க்கிறார் என்பதைப் பொறுத்து கட்டணங்கள் இருக்கும். கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட ஒப்பந்தப் புள்ளியின்கீழ் போட்டியிடும் நிறுவனங்களின் கட்டணங்கள் அமையும்.
மருத்துவ வளங்களை விவேகமான முறையில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் ெசாந்த உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவும் மருத்துவ நிலையங் களுக்குச் செல்லும்போது வெளிநாட்டில் ஊழியர்களும் ஒவ்வொரு முறையும் தங்களுடைய பங்காக தலா ஐந்து வெள்ளி கட்டணம் செலுத்த வேண்டும். தொலைத்தொடர்பு மூலம் மருந்துகளை வாங்க அந்தக் கட்டணம் இரண்டு வெள்ளியாக இருக்கும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.
மனிதவள அமைச்சின் செப்டம்பர் மாத ஒப்பந்தப் புள்ளியின்படி, அடுத்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. புதிய திட்டத்தின் கீழ், ஆறு துறைகளில் சுகாதார சேவை வழங்கப்படும். அதில் ஒவ்வொன்றிலும் குறைந்தது 40,000 வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடங் களுக்கு உள்ளேயும் வெளியேயும் வசிப்பவர்களாக இருப்பார்கள்.