காதலியின் 14 வயது மகளை கர்ப்பமாக்கிய 29 வயது ஆடவருக்கு நேற்று 12 ஆண்டுகள் சிறை, ஆறு பிரம்படிகள் விதிக்கப்பட்டன.
குறைந்தவயது அப்பாவி பெண் களுடன் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி பாலியில் உறவில் ஈடுபடும் குற்றச்செயல்களுக்கு தண்ட னையை உயர்த்துவதற்காக அண்மையில் குற்றவியல் சட்டம் திருத்தப்பட்டது. அதன் பிறகு விசாரணைக்கு வந்துள்ள முதல் சம்பவம் இது என நம்பப்படுகிறது.
அந்த நபரை ‘டாடி’ என்று அழைத்துவந்த சிறுமிக்கு அவரது 15வது வயதில் கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.
சிறுமியிடம் பாலியல் உறவு கொண்ட மூன்று குற்றச்சாட்டுகளை அந்த ஆடவர் கடந்த அக்டோபர் மாதம் ஒப்புக் கொண்டார்.
தற்போது 17 வயதாகும் சிறுமியை அடையாளம் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக நபரின் பெயரையும் சிறுமியின் பெயரையும் வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு முன்பாகவே அச்சிறுமியின் பத்து முதல் 12 வயது வரை மற்றொரு குடும்ப உறுப்பினர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார் என்று நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
2015ல் சிறுமியின் தாயாரை அந்த நபர் முதல் முறையாகச் சந்தித்தார். அதன் பிறகு 2016 மே மாதம் இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். மகளும் அவர்களுடன் தங்கினார். அப்போது அந்தச்சிறுமியின் உண்மையான தந்தை சிறையில் இருந்தார்.
இந்த நிலையில் சிறுமியிடம் அவர் அக்கறையாக நடந்துகொண்டதால் தந்தை, மகளாக இருவரும் பழகி வந்தனர்.
இருந்தாலும் 2018 பிற்பாதியில் அது பாலியல் உறவாக மாறியது. வீட்டுக்கு வருவாய் ஈட்டும் ஒரே நபரான சிறுமியின் தாயார் வீட்டில் இல்லாதபோது பாதுகாப்பற்ற பாலியல் உறவில் அவர்கள் ஈடுபட்டனர்.
ஓராண்டுக்குப் பிறகு சிறுமி கர்ப்பமானார். கடந்த ஆண்டு மே 14ஆம் தேதி சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் காட்டியபோது அவர் கர்ப்பமாகி யிருப்பது தெரிய வந்தது. சிறுமியாக இருந்ததால் மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக போலிசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கடந்த ஜூலை மாதம் வீட்டில் அந்த நபரை போலி சார் கைது செய்தனர்.