இந்தியா, மலேசியா, இந்தோனீசியாவில் இருந்து 'விடிஎல்' விமானங்கள் வருகை

இந்தியா, மலேசியா, இந்தோனீசியாவில் இருந்து 'விடிஎல்' விமானங்கள் வருகை

1 mins read
880fa3bd-38bc-4b31-b77e-764fd33f7bed
-

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான, தனிமை உத்­த­ர­வற்ற பயணத் திட்­டத்­தின்­கீழ் (விடி­எல்) நேற்று கோலா­லம்­பூர், இந்­தியா, இந்­தோ­னீ­சி­யா­வில் இருந்து விமா­னங்­கள் சாங்கி விமா­ன­ நி­லை­யத்­தில் தரை­யி­றங்­கின.

ஓமிக்­ரான் என்ற கிருமி தலை­யெ­டுப்­ப­தால் அனைத்­து­லக எல்லை­கள் மறு­ப­டி­யும் மூடப்­ப­ட­லாம் என்ற அதி­க­ரித்து வரும் அச்­சத்­திற்கு இடையே நேற்று சிங்­கப்­பூ­ரில் அந்த விமா­னங்­கள் தரை­யி­றங்­கின. அவற்­றோடு பின்­லாந்து, சுவீ­டன் நாடு­களுக்­கான விடி­எல் பய­ணத் திட்­டங்­களும் திட்­ட­மிட்­ட­படி நேற்று தொடங்க இருந்­தன.

சாங்கி விமா­ன­ நி­லை­யத்­தில் நேற்று மொத்­தம் 29 விடி­எல் விமா­னங்­கள் தரை­யி­றங்க இருந்­தன. அவற்­றில் 10 சேவை­கள் புதிய விடிஎல் நகர்­களில் இருந்து வர­வி­ருந்­தன. மலே­சி­யா­வில் இருந்து ஆறு விமா­னங்­களும் இந்­தோ­னீ­சியா, இந்­தி­யா­வில் இருந்து தலா இரண்டு விமா­னங்­களும் அவற்­றில் அடங்­கும்.

இவ்­வே­ளை­யில், நேற்று சிங்­கப்­பூ­ரில் இருந்து புறப்­பட்ட முத­லா­வது விடி­எல் விமா­னம் கோலா­லம்­பூர் அனைத்­து­லக விமான நிலை­யத்­தில் காலை 9.20 மணிக்­குத் தரை­யி­றங்­கி­யது.

அந்த சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் விமா­னத்­தில் 240 பய­ணி­கள் சென்­ற­னர். தரை­யி­றங்­கிய விமானம் தண்­ணீர் தெளித்து வர­வேற்­கப்­பட்­டது. கோலா­லம்­பூ­ரில் இருந்து புறப்­பட்ட சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் விமா­னம் நேற்று முற்­ப­கல் 11.35 மணிக்கு சிங்­கப்­பூர் வந்­தது.

நேற்று தொடங்­கிய புதிய விடிஎல் பய­ணத் திட்­டங்­களை அடுத்து இப்­போது 18 நாடு­க­ளைச் சேர்ந்த தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பய­ணி­கள், தங்­க­ளைத் தனி­மைப்­படுத்­திக்கொள்ள வேண்­டிய தேவை இன்றி சிங்­கப்­பூர் வர­மு­டி­யும்.