ரகசிய காணொளி, வர்த்தகருக்கு மிரட்டல், 4வது நபருக்குச் சிறை

ரகசிய காணொளி, வர்த்தகருக்கு மிரட்டல், 4வது நபருக்குச் சிறை

3 mins read
ca2647fa-38e8-41d0-98ed-8bdd0df553da
மகாதேவன் எட்வினுக்கு நேற்று 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

திரு­ம­ண­மான வர்த்­த­கர் ஒரு­வர், மற்­றொரு ஆணு­டன் பாலி­யல் உற­வில் ஈடு­பட்­டதை ரக­சி­ய­மாக படம்­பி­டித்து அவரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்த மூவரை போலி­சார் கைது செய்­துள்­ள­னர்.

சுமார் $60,000 வெள்ளி அவ­ரி­ட­மி­ருந்து பறிக்க ஆரம்பத்தில் திட்­டம் தீட்­டப்­பட்­டது. பின்­னர் அந்­தத் தொகை $50,000க்கு குறைக்கப்­ பட்­டது.

ஆனால் பணம் கைமா­று­வ­தற்கு முன்­பா­கவே மூவ­ரும் கைதாகினர். தற்­போது பிணை­யில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அப்போதும் மூவ­ரில் ஒரு­வ­ரான டான், எப்­படி­யா­வது 53 வயது வர்த்­த­க­ரி­ட­மி­ருந்து பணத்தை பறித்துவிட வேண்­டும் என்­ப­தில் உறுதியாக இருந்­தார். இத­னால் நான்­கா­வது நப­ராக மகா­தே­வன் எட்­வினை தனது சதித் திட்டத்தில் சேர்த்துக் கொண்டார்.

அந்த சம­யத்­தில் 24 வய­தான மகா­தே­வ­னி­டம் பணத்­தைப் பாதியாகப் பிரித்துக் கொள்­ள­வும் டான் சம்மதித்தார்.

நேற்று மகாதேவன் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வர்த்தகரை மிரட்­டிய குற்­றத்தை ஒப்புக்கொண்ட தற் போது 29 வய­தா­கும் மகா­தேவ­னுக்கு 18 மாத சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ர­ரான மகா­தே­வன் ஏற்­கெ­னவே சிறை சென்­ற­வர். குற்றச்­ செ­யல்­க­ளி­லி­ருந்து வில­கி­யி­ருக்க வேண்­டும் என்ற நிபந்­த­னை­யின் கீழ் 2019ஆம் ஆண்­டின் பிற்­ப­கு­தி ­யில் அவர் சிறை­யி­லி­ருந்து விடு விக்கப்பட்டார்.

இதை மீறியதால் கூடு­த­லாக 59 நாட்­கள் சிறைத்­தண்­ட­னையை அவர் அனு­ப­விக்க நேரிட்டுள்ளது.

டான் யோங் ஜியான், டேரின் ஹோ யோங் ஜியான் மற்­றும் வர்த்­த­க­ரின் முன்­னாள் உத­வி­யா­ளர் ஆகிய மூவ­ரும் இதற்கு முன்­னர் நீதி­மன்­றத்­தால் விசா­ரிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

வர்த்­த­கர் மற்­றும் அவ­ரது முன்­னாள் உத­வி­யா­ள­ரின் பெயரை வெளி­யிட நீதி­மன்­றம் தடை விதித்­துள்­ளது.

2019ஆம் ஆண்டு பிற்­ப­கு­தி­யில் உத­வி­யா­ளர், வர்த்தகரின் வீட்­டில் ரக­சி­ய கேம­ராவை நிறுவி அவர் மற்­றொரு ஆணு­டன் பாலி­யல் உற­வில் ஈடு­பட்­டதை படம்பிடித்­தார்.

பின்­னர் உத­வி­யா­ளர், டான், ஹோ ஆகிய மூவ­ரும் அவ­ரி­டம்­இருந்து பணத்தைப் பறிக்க திட்­டம் தீட்­டி­னர்.

வர்த்­த­கர் இது பற்றி போலி­சில் புகார் அளித்­த­தால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி மூவ­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இவர்­கள் தற்­போது பிணை­யில் உள்­ள­னர்.

இந்த நிலை­யில் மகா­தே­வன் மூலம் வர்த்­த­க­ரி­ட­மி­ருந்து பணத்­தைப் பறிக்க டான் திட்­டம் போட்­டார்.

இதற்காக வர்த்­த­க­ரின் ரக­சிய காணொளி, அவ­ரது பின்­னணி விவ­ரங்­களை மகாதேவனிடம் யோங் ஜியான் பகிர்ந்­து­கொண்­டார்.

டானும் வர்த்­த­க­ரின் கைபேசி எண்ணை மகா­தே­வ­னுக்கு வழங்­கி­னார். இவற்றைப் பெற்றுக் கொண்ட மகாதேவன், கடந்த ஆண்டு ஏப்­ரல் 3ஆம் தேதி 4.20 மணி­ய­ள­வில், 24 மணி நேரத்­தில் $50,000 ஒப்­ப­டைக்க வேண்­டும் என்று வர்த்­த­க­ருக்கு குறுந்­த­க­வல் அனுப்­பி­னார்.

ஆணு­டன் பாலி­யல் உறவு கொண்ட காணொ­ளியை சமூக ஊட­கங்­களில் வெளி­யிட்­டு­வி­டு­வ­தா­க­வும் மகா­தே­வன் குறுந்தகவல் மூலம் மிரட்­டி­யி­ருந்­தார்.

இதற்கு வர்த்­த­கர் உட­ன­டி­யாக பதில் அளிக்­க­வில்லை. மறு­நாள் பிற்பகல் 3.00 மணி­ய­ள­வில் 50,000 வெள்­ளியை புரட்ட ஒரு வாரம் அவ­கா­சம் தேவை என்று வர்த்­த­கர் பதில் அனுப்­பி­னார். தாமதமாக வந்த பதிலால் சந்­தே­க­ம­டைந்த மகா­தே­வன் தன்­னைப் பிடிக்­கா­மல் இருக்க கைபேசியையும் சிம் அட்­டையையும் வீசி­விட்­டார்.

அப்­ப­டி­யும் அதே நாள் இரவு 9.00 மணிக்கு மகா­தே­வன் போலி­சா­ரி­டம் பிடி­பட்­டார்.