வெளிநாட்டு ஊழியர்களுக்கு மருத்துவ பராமரிப்புத் திட்டம்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு மருத்துவ பராமரிப்புத் திட்டம்

2 mins read
8f5faa7d-796c-4a57-91c5-09fc236dee31
புதிய சுகாதாரப் பராமரிப்புத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு ஊழியர்களும் ஒவ்வொரு முறை மருந்தகத்துக்குச் செல்லும்போது தலா ஐந்து வெள்ளி கட்டணம் செலுத்த வேண்டும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலைக்கு அமர்த்­தி­யுள்ள நிறு வனங்­கள், ஊழி­யர்­க­ளின் மருத்து வச் செல­வு­க­ளைச் சமா­ளிப்­ப­தற்கு ஏது­வாக ஆரம்ப சுகா­தாப் பரா­ம­ரிப்புத் திட்­டத்தை விரை­வில் வாங்க வேண்­டி­யி­ருக்­கும்.

அதற்­கான கட்­ட­ணம், ஒவ்­வொரு ஊழி­ய­ருக்­கும் ஆண்­டுக்கு தலா 108 வெள்­ளி­யி­லி­ருந்து $145 வரை­ இருக்­கும்.

சிங்­கப்­பூ­ரின் நான்கு சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிறு­வ­னங்­கள் இந்­தத் திட்­டங்­களை வழங்­க­வி­ருக்­கின்­றன. கடந்த ஆண்டு புதிய ஆரம்ப சுகா­தாரக் கட்­ட­மைப்பு பற்றி அறி­விக்­கப்­பட்­டது. அதன் ஒரு பகு­தி­யாக அந்த நான்கு சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­க­ளுக்­கும் ஆறு வட்­டார மருத்­துவ நிலை­யங்­களை நடத்த அனு­மதி வழங்­கப்­பட்­டது.

"சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு வழங்­கு­வோ­ரி­டம் முத­லா­ளி­கள் நேரி­டை­யாக ஊழி­ய­ருக்­கான பரா­ம­ரிப்­புத் திட்­டத்ைத வாங்­க­லாம். அதற்­கான கட்­ட­ணங்­களை மாதந்­தோ­றும் தவணை முறை­யில் செலுத்­த­லாம்," என்று மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் நேற்று ெதரி­வித்­தார்.

ஒர்க் பாஸ் தொடர்­பான மருத்­து­வச் சோத­னை­கள், மருத்­துவ ஆலோ­ச­னை­கள், சிகிச்சை, ஆண்டு­தோ­றும் உடல்­ந­லப் பரி­சோ­தனை, தொலை­த்தொ­டர்பு மருந்து விநி­யோ­கம் உள்­ளிட்­ட­வற்­றுக்கு இந்­தப் பணத்தை பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம் என்­றார் அவர். சிங்­கப்­பூ­ரில் 250,000க்கும் மேற்­பட்ட வெளி­நாட்டு ஊழி­யர்­கள் பணி­யாற்று­கின்­ற­னர்.

ஊழி­யர் எந்த இடத்­தில் வேலை பார்க்­கி­றார் என்­ப­தைப் பொறுத்து கட்­ட­ணங்­கள் இருக்­கும். கடந்த செப்­டம்­பர் மாதம் வெளி­யி­டப்­பட்ட ஒப்­பந்­தப் புள்ளியின்கீழ் போட்­டி­யி­டும் நிறு­வ­னங்­க­ளின் கட்­ட­ணங்­கள் அமை­யும்.

மருத்­துவ வளங்­களை விவே­க­மான முறை­யில் பயன்­ப­டுத்­து­வதை ஊக்­கு­விக்­க­வும் ெசாந்த உடல் ­நலத்­தில் அக்­கறை எடுத்­துக்­கொள்­ள­வும் மருத்­துவ நிலை­யங்­ க­ளுக்­குச் செல்­லும்­போது வெளி­நாட்­டில் ஊழி­யர்­களும் ஒவ்­வொரு முறை­யும் தங்­க­ளு­டைய பங்­காக தலா ஐந்து வெள்ளி கட்­ட­ணம் செலுத்த வேண்­டும். தொலைத்­தொ­டர்பு மூலம் மருந்­து­களை வாங்க அந்­தக் கட்­ட­ணம் இரண்டு வெள்­ளி­யாக இருக்­கும் என்று மனி­த­வள அமைச்சு தெரி­வித்­தது.

மனி­த­வள அமைச்­சின் செப்­டம்­பர் மாத ஒப்­பந்­தப் புள்ளியின்படி, அடுத்த ஆண்டு இரண்­டாம் காலாண்­டில் புதிய திட்­டம் செயல்­ப­டுத்­தப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ ப­டு­கிறது. புதிய திட்­டத்­தின் கீழ், ஆறு துறை­களில் சுகா­தார சேவை வழங்­கப்­படும். அதில் ஒவ்­வொன்­றி­லும் குறைந்­தது 40,000 வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்­கு­மி­டங் ­க­ளுக்கு உள்­ளே­யும் வெளி­யே­யும் வசிப்­ப­வர்­க­ளாக இருப்­பார்­கள்.