சிறுமியிடம் பாலியல் உறவு; 29 வயது இளையருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை, ஆறு பிரம்படி

சிறுமியிடம் பாலியல் உறவு; 29 வயது இளையருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை, ஆறு பிரம்படி

2 mins read
44474598-1053-4ffe-bbe4-c2b5940725db
-

காத­லி­யின் 14 வயது மகளை கர்ப்­ப­மாக்­கிய 29 வயது ஆட­வ­ருக்கு நேற்று 12 ஆண்­டு­கள் சிறை, ஆறு பிரம்­ப­டி­கள் விதிக்­கப்­பட்­டன.

குறைந்தவயது அப்­பாவி பெண் ­க­ளு­டன் சந்­தர்ப்­பத்­தைப் பயன் ­படுத்தி பாலி­யில் உற­வில் ஈடு­படும் குற்­றச்­செ­யல்­க­ளுக்கு தண்­ட னையை உயர்த்­து­வ­தற்­காக அண்­மை­யில் குற்­ற­வி­யல் சட்­டம் திருத்­தப்­பட்டது.

அதன் பிறகு விசா­ர­ணைக்கு வந்­துள்ள முதல் சம்­ப­வம் இது என நம்­பப்­ப­டு­கிறது.

அந்த நபரை 'டாடி' என்று அழைத்­து­வந்த சிறு­மிக்கு அவ­ரது 15வது வய­தில் கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்­தது.

சிறு­மி­யி­டம் பாலி­யல் உறவு கொண்ட மூன்று குற்­றச்­சாட்­டு­களை அந்த ஆட­வர் கடந்த அக்­டோ­பர் மாதம் ஒப்­புக் கொண்­டார்.

தற்­போது 17 வய­தா­கும் சிறு­மியை அடை­யா­ளம் கண்­டு­பி­டிக்­கா­மல் இருப்­ப­தற்­காக நப­ரின் பெய­ரை­யும் சிறு­மி­யின் பெய­ரை­யும் வெளி­யிட நீதி­மன்­றம் தடை விதித்­துள்­ளது.

இந்­தச் சம்­ப­வத்­துக்கு முன்­பாகவே அச்சிறு­மி­யின் பத்து முதல் 12 வயது வரை­ மற்­றொரு குடும்ப உறுப்­பி­னர் ஒரு­வரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார் என்று நீதி­மன்ற விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

2015ல் சிறு­மி­யின் தாயாரை அந்த நபர் முதல் முறை­யா­கச் சந்­தித்­தார். அதன் பிறகு 2016 மே மாதம் இரு­வ­ரும் ஒரே வீட்­டில் சேர்ந்து வாழ முடிவு செய்­த­னர். மகளும் அவர்­க­ளு­டன் தங்­கி­னார். அப்­போது அந்­தச்­சி­று­மி­யின் உண்­மை­யான தந்தை சிறை­யில் இருந்­தார்.

இந்த நிலை­யில் சிறு­மி­யி­டம் அவர் அக்­க­றை­யாக நடந்­து­கொண்­ட­தால் தந்தை, மக­ளாக இரு­வ­ரும் பழகி வந்­த­னர்.

இருந்­தா­லும் 2018 பிற்­பா­தி­யில் அது பாலி­யல் உற­வாக மாறி­யது. வீட்­டுக்கு வரு­வாய் ஈட்­டும் ஒரே நப­ரான சிறு­மி­யின் தாயார் வீட்­டில் இல்­லா­த­போது பாது­காப்­பற்ற பாலி­யல் உற­வில் அவர்­கள் ஈடு­பட்­ட­னர்.

ஓராண்­டுக்­குப் பிறகு சிறுமி கர்ப்­ப­மா­னார்.

கடந்த ஆண்டு மே 14ஆம் தேதி சிறு­மிக்கு கடு­மை­யான வயிற்று வலி ஏற்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் காட்­டி­ய­போது அவர் கர்ப்­ப­மா­கி ­யி­ருப்­பது தெரிய வந்­தது.

சிறு­மி­யாக இருந்­த­தால் மருத்து­வமனை ஊழி­யர்­கள் உடனடியாக போலி­சா­ருக்­குத் தக­வல் தெரி­வித்­த­னர்.

இதையடுத்து கடந்த ஜூலை மாதம் வீட்டில் அந்த நபரை போலி சார் கைது செய்தனர்.