யோகா பயிற்றுவிப்பாளர் மீது இன்று குற்றச்சாட்டு

யோகா பயிற்றுவிப்பாளர் மீது இன்று குற்றச்சாட்டு

1 mins read
6403580f-e8f9-4d7c-a29c-ebace1f5109e
-

யோகா வகுப்­பின்­போது பெண்­களை வளைத்­துப் பிடித்து மான­பங்­கப்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டை யோகா பயிற்­று­விப்­பா­ளர் ஒரு­வர் எதிர்­நோக்­கு­கி­றார்.

அவர் மீது நீதி­மன்­றத்­தில் இன்று குற்­றம் சாட்­டப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

நேற்று போலி­சார் வெளி­யிட்ட அறிக்­கை­யில் பத்து மான­பங்­கக் குற்­றச்­சாட்­டு­களை பயிற்­று­விப் பாளர் எதிர்­நோக்­கு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

யோகா பயிற்­று­விக்­கும்­போது குறைந்­தது ஐந்து பெண்­களை அவர் மான­பங்­கப்­ப­டுத்­தி­யி­ருக்­க­லாம் என நம்­பப்­ப­டு­கிறது.

பாதிக்­கப்­பட்ட பெண்­கள் 24 முதல் 38 வயது வரை­யி­லா­ன­வர்­கள். கடந்த ஆண்டு ஜூலை­யில் யோகா ஸ்டு­டி­யோ­வில் நடந்த யோகா வகுப்­பில் தன்னை இரண்டு முறை அவர் மான­பங்­கப்­ப­டுத்­தி­ய­தாக முன்­னாள் மாணவி ஒரு­வர் புகார் அளித்­ததை நியூ­பேப்­பர் நாளி­தழ் 2020ல் செய்­தி­யாக வெளி­யிட்­டி­ருந்­தது.

இந்­தச் சம்­ப­வத்தை சமூக ஊட கங்­களில் பகிர்ந்­து­கொண்ட மாணவி பின்­னர் போலி­சா­ரி­டம் அவர் மீது புகார் அளித்­தார்.

அந்­தச் சம­யத்­தில் யோகா ஸ்டு­டி­யோ­வுக்கு இரண்டு கிளை­கள் இருந்­தன. சம்­ப­வத்­துக்­குப் பிறகு பயிற்­று­விப்­பா­ளர் விடு­மு­றை­யில் அனுப்­பப்­பட்­ட­தாக தெரி கிறது. பயிற்­று­விப்­பா­ளர் பற்றி அந்த மாணவி அங்­கி­ருந்த ஊழி­யர் ஒரு­வ­ரி­ட­மும் புகார் செய்­தார்.

மாண­வர்­களை அவர் தகாத முறை­யில் தொடு­வது இது முதல் முறை­யல்ல என்று ஊழி­யர் கூறிய தால் மாணவி அதிர்ச்சி அடைந்­தார்.

மறு­நாள் காலை தந்­தை­யு­டன் வந்து யோகா ஸ்டு­டியோ உரி­மை­யா­ளர்­க­ளைச் சந்­தித்து மாணவி மீண்­டும் புகார் கூறி­னார். அப்­போது பயிற்­று­விப்­பா­ளர் மீது நட­வ­டிக்கை எடுப்­ப­தாக உரிமையாளர்­கள் உறு­தி­ய­ளித்­த­னர். ஆனால் அந்­தப் பயிற்­று­விப்­பா­ளர் தொடர்ந்து வகுப்­பு­களை நடத்த அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தார்.