ஓமிக்ரான்: தெரிந்துகொள்ள தேவையான ஐந்து அம்சங்கள்

ஓமிக்ரான்: தெரிந்துகொள்ள தேவையான ஐந்து அம்சங்கள்

2 mins read
9e4f99e6-73ca-4ee0-a4a3-00a44ee1aa3c
-

கொவிட்-19 உரு­மா­றிய டெல்டா கிரு­மி­யு­டன் வாழப் பழ­கிக்­கொள்­வ­தில் சிங்­கப்­பூர் நல்ல முன்­னேற்றம் கண்டுள்ளது.

ஆனால் திடீ­ரென தலை­தூக்கி இருக்­கும் ஓமிக்­ரான் புதிய பிரச்­சினையாகிவிட்டது.

இந்த நிலை­யில், புதிய ஓமிக்ரான் கிருமி பற்றி ஐந்து முக்­கிய அம்­சங்­களை நாம் தெரிந்து­கொள்ள வேண்­டும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தார்.

கொவிட்-19 உரு­மா­றிய கிருமி­ களில் டெல்டா கிருமி தலை­தூக்­கி­ய­தைப் போல ஓமிக்­ரான் இதர கிரு­மி­க­ளை­விட அதிக ஆதிக்கம் செலுத்­தும் ஒன்­றாக இருக்­குமா என்­பதை சிங்­கப்­பூர் தெரிந்து­ கொள்ள வேண்­டும்.

டெல்டா கிருமி உல­கம் முழு­வதும் பர­வு­வ­தற்கு ஏறத்­தாழ மூன்று முதல் நான்கு மாத காலம் பிடித்­தது. ஓமிக்­ரான் வேக­மாக பர­வக்­கூ­டிய கிரு­மி­யாக இருந்­தால் அது, மூன்று முதல் நான்கு மாதங்­களுக்கு முன்­ன­தா­கவே தன் பிடி­யின்கீழ் உலகைக் கொண்டு­வந்­துவி­டும்.

என்­றா­லும் பல நாடு­களும் உட­னடி­யாக புதிய எல்லை கட்டுப்­ பா­டு­களை நடப்­புக்குக் கொண்டு வரு­வ­தால் ஓமிக்­ரான் பர­வும் வேகத்தைக் குறைக்க முடி­யும்.

இடைப்­பட்ட காலத்­தில் அது பற்றி நன்­றா­கப் புரிந்­து­கொண்டு ஏற்­பு­டைய அம­லாக்க நட­வ­டிக்­கை­களை நாம் நடை­மு­றைப்­ப­டுத்­த­லாம். இதர உரு­மா­றிய கிரு­மி­களைக் கண்­ட­றி­வ­தைப் போல ஏஆர்டி பரி­சோ­த­னை­யும் இதர பரி­சோ­த­னை­யும் ஓமிக்­ரான் கிருமி­ யை­யும் கண்­ட­றி­யுமா என்­பது நாம் தெரிந்­து­கொள்ள வேண்­டி­யது மூன்­றா­வது அம்­சம்.

இதைப் பொறுத்­த­வரை, தெர்மோஃபிஷர் என்ற நிறு­வனத்தின் குறிப்­பிட்ட பரி­சோதனை உத­வும். ஒரு­வ­ருக்கு ஓமிக்­ரான் தொற்­றும் வாய்ப்பு இருக்­கி­றதா என்­பதை அந்­தப் பரி­சோ­தனை கண்­டு­பி­டிக்­கும்.

ஓமிக்­ரான் கிருமி எந்த அளவுக்குத் தொற்றும், அது டெல்டா கிரு­மி­யை­விட ஆபத்­தா­னதா என்­பது பற்றி நாம் புரிந்­து­கொள்ள வேண்­டும். இது இன்­ன­மும் தெளி­வா­கத் தெரி­ய­வில்லை.

ஓமிக்­ரான் தொற்­றி­னால் கடுமை­யான சுகா­தாரப் பரா­ம­ரிப்பு நடை­மு­றை­க­ளைப் பின்­பற்ற வேண்டி இருக்­கும்.

கொவிட்-19 முதன்­மு­த­லில் தலை­காட்­டி­ய­போது நடப்­புக்கு வந்த அள­வுக்கு அந்­தக் கட்­டுப்­பா­டு­கள் இருக்­கும்.

ஓமிக்­ரான் தொற்­றி­ய­தாக சந்­தே­கம் ஏற்­பட்­டால் அவர்­கள் தொற்றுநோய்க்­கான தேசிய நிலை­யத்­தில் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள். வீட்­டில் இருந்து குண­ம­டைய அனு­மதி இருக்­காது.

இப்­போது நடப்­பில் உள்ள தடுப்­பூ­சி­கள் எந்த அள­வுக்கு ஓமிக்­ரா­னுக்கு எதி­ராக செயல்­படும் என்­பது நாம் புரிந்­து­கொள்ள வேண்­டிய ஐந்­தா­வது அம்­சம்.

தென்னாப்­பி­ரிக்­காவைப் பொறுத்­த­வரை, கடு­மை­யான ஓமிக்­ரான் தொற்று அறி­கு­றி­களுக்கு ஆளாகி இருப்­போ­ரில் 65 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட்­டுக் கொள்­ளா­த­வர்­கள். எஞ்­சிய 35 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யான தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள். இந்­தப் புள்­ளி­வி­வரங்­கள் பூர்­வாங்­க­மா­ன­வை­தான் என்­றா­லும் தடுப்­பூ­சி­கள் இன்­ன­மும் பல­ன­ளிக்­கின்­றன என்ற முடி­வுக்கே நாம் வர­லாம்.

ஆகை­யால், மக்­கள் தடுப்­பூசி­­களை­யும் பூஸ்­டர் ஊசி­யை­யும் தொடர்ந்து போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்று திரு ஓங் வலி­யு­றுத்­தி­னார்.