ஓமிக்ரான் மரபணுவில் பல திடீர் மாற்றங்கள்; உருமாறிய புதிய கிருமியைக் கண்டுபிடித்து தடுக்கும் ஆற்றல் பாதிக்கப்படக்கூடும்

ஓமிக்ரான் மரபணுவில் பல திடீர் மாற்றங்கள்; உருமாறிய புதிய கிருமியைக் கண்டுபிடித்து தடுக்கும் ஆற்றல் பாதிக்கப்படக்கூடும்

2 mins read
3e13d119-c187-4265-bc26-1f153d9b569a
கொவிட்-19 அமைச்சுகள்நிலை பணிக்குழுவினர் நேற்று செய்தியாளர் மாநாட்டில் பல விவரங்களை அறிவித்தனர். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

புதி­தாக தலை­தூக்கி உள்ள கொவிட்-19 உரு­மா­றிய ஓமிக்­ரான் கிரு­மியைப் பொறுத்­த­வரை அத­னுடைய மர­ப­ணுக்­கள் பெரி­ய­ள­வில் திடீர் மாற்­றங்­க­ளுக்கு உட்­பட்­டவை.

இதற்கு முன்­ன­தாக தனித்த ஓர் உரு­மா­றிய கொவிட்-19 கிருமி எதி­லும் மர­ப­ணுக்­கள் அந்த அள­வுக்குத் திடீர் மாற்­றங்­க­ளுக்கு உட்­பட்­ட­தா­கத் தக­வல் இல்லை.

உரு­மா­றிய ஓமிக்­ரான் கிரு­மி­யின் புர­தத்­தில் காணப்­படும் 5,000 மர­ப­ணுக்­களில் 32 திடீர் மாற்­றங்­களை இது­வரை அறி­வி­யல் அறி­ஞர்­கள் கண்­டு­பி­டித்துள்ளனர்.

இதை வைத்துப் பார்க்­கை­யில் இதர கொவிட்-19 உரு­மா­றிய கிரு­மி­களில் இருந்து ஓமிக்­ரான் கிருமி வேறு­பட்ட இயல்­பு­க­ளைக் கொண்­டி­ருக்­கக்­கூ­டும் என்று நம்­பு­வ­தற்கு இடமுள்ளதாக சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று அமைச்சு­கள்நிலை கொவிட்-19 பணிக்­குழு செய்­தி­யா­ளர் கூட்டத்தில் கூறினார்.

ஓமிக்­ரான் மர­ப­ணு­வில் காணப்­படும் அள­வுக்கு டெல்டா கிருமி மர­ப­ணு­வில் திடீர் மாற்­றங்­கள் காணப்­ப­ட­வில்லை. இவற்றின் அடிப்படையில் பார்க்­கும்­போது டெல்­டா­வை­விட ஓமிக்­ரான் வேக­மாக, பர­வ­லா­கப் பர­வக்­கூ­டிய ஆற்­ற­லைக் கொண்­டி­ருக்­க­லாம்.

அது கொவிட்-19 உரு­மா­றிய இதர கிரு­மி­க­ளை­விட அதிக ஆதிக்­கம் செலுத்­துமா என்­ப­தைப் பொறுத்­த­வரை, நாம் மிக­வும் எச்­சரிக்­கை­யாக இருந்­து­கொள்ள வேண்­டும் என்று திரு ஓங் குறிப்­பிட்­டார்.

ஒரு கிரு­மி­யின் முக்­கி­ய­மான அங்­கம் அதன் வெளிப்­பு­றத்தில் காணப்­படும் புர­த­மா­கும். அது­தான் மனித உயி­ர­ணு­வில் அந்­தக் கிருமி ஒட்­டிக்­கொள்ள வகை­செய்­கிறது.

அப்­படி ஒட்­டிக்­கொண்­ட­தும் அந்­தக் கிருமி உயி­ர­ணு­வில் பர­வு­கிறது.

ஆகை­யால், ஒரு கிரு­மி­யின் வெளிப்­புற புர­தத்­தில் ஏற்­படும் திடீர் மாற்­றம், அந்­தக் கிருமி மனித உயி­ர­ணுக்­களை எந்த அள­வுக்கு அதி­க­மா­கப் பாதிக்­கும் என்­பதை முடிவு செய்­வ­தாக இருக்­கும் என்று சிங்­கப்­பூ­ரின் மருத்­துவ சேவை­கள் துறை இயக்­கு­நர் கென்­னத் மாக் நேற்­றைய செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தார்.

புதிதாக தலைதூக்கி உள்ள ஓமிக்­ரான் கிரு­மி­யின் புர­தத்­தில் ஏற்­பட்­டுள்ள மாற்­றங்­கள் கார­ண­மாக அந்­தக் கிரு­மியைக் கண்­டு­பி­டித்து அதைத் தடுப்­ப­தற்­கான ஆற்­றல்­களில் பாதிப்பு ஏற்படக்­கூடும் என்று இணைப் பேரா­சி­ரி­யர் மாக் குறிப்பிட்டார்.