புதிய எல்லை கட்டுப்பாடுகள்: பயணிக்கு கடும் பரிசோதனை

புதிய எல்லை கட்டுப்பாடுகள்: பயணிக்கு கடும் பரிசோதனை

2 mins read
e528a253-6cf1-4651-8da4-848b1b36c8bd
-

புதிய உரு­மா­றிய கொவிட்-19 ஓமிக்­ரான் கிருமி பற்றி இனி­மேல்­தான் மேலும் பல­ வி­வ­ரங்­கள் வர­வேண்­டும். இந்­நி­லை­யில், நாளை இரவு 11.59க்குப் பிறகு சிங்­கப்­பூர் வரும் பய­ணி­கள் அனை­வ­ருக்­கும் பரி­சோ­தனை நடை­மு­றை­களை சிங்­கப்­பூர் மேம்­ப­டுத்­து­கிறது.

இந்த நடை­மு­றை­கள் நான்கு வார காலத்­திற்கு தொட­ரும். அவற்றை நீட்­டிக்க வேண்­டுமா என்­பது பற்றி பிறகு முடிவு செய்­யப்­படும்.

இதன்­தொ­டர்­பில் பொது­மக்­கள் பல நில­வ­ரங்­க­ளைத் தெரிந்­து­கொள்ள வேண்­டும்.

சிங்­கப்­பூ­ருக்கு வரும், சிங்­கப்­பூர் வழி­யா­கச் செல்­லும் விமா­னப் பய­ணி­கள் அனை­வ­ரும் பய­ணப் புறப்­பாட்­டுக்கு முன் இரண்டு நாட்­க­ளுக்­குள் பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டும்.

தொற்று இல்லை என்­பது உறு­தி­யாக வேண்­டும். சிங்­கப்­பூ­ரில் தரை­யி­றங்­கும்­போது பிசி­ஆர் சோத­னைக்குப் பய­ணி­கள் உட்­பட வேண்­டும்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோருக்­கான விமா­னப் பயண திட்­டத்­தின்­கீழ் வரு­வோ­ருக்கு கூடு­த­லாக ஏர்­ஆர்டி சோதனை நடத்­தப்­படும்.

இவை ஒரு­பு­றம் இருக்க, அதிக தொற்று ஆபத்­துள்ள நாடு­க­ளுக்­கும் வட்­டா­ரங்­க­ளுக்­கும் ஏதா­வது பயண ஏற்­பாடு இருந்­தால் அதை ஒத்­தி­வைக்­கும்­படி சிங்­கப்­பூர்­வா­சி­கள் அனை­வருக்­கும் ஆலோ­சனை கூறப்­படு­கிறது.

ஓமிக்­ரான் தலை­தூக்கி இருப்­ப­தாகத் தெரி­ய­வந்­துள்ள நாடு­களுக்கு அல்­லது வட்­டா­ரங்­களுக்கு யாரா­வது சென்று இருப்­பார்­க­ளே­யா­னால் அவர்­கள் கூடு­தல் முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன் நடந்­து­கொள்ள வேண்­டும்.

அதா­வது முகக்­க­வ­சங்­களை அணி­வது, சொந்த சுகா­தா­ரப் பழக்­க­வ­ழக்­கங்­க­ளைக் கடை­பிடிப்­பது, பாது­காப்பு இடை­வெளியைக் கடை­ப்பி­டிப்­பது போன்ற நிபந்­தனைகள் அந்த நாடு­களில் கட்­டா­ய­மா­னவை அல்ல என்­றா­லும் அவற்றை அத்­த­கைய நாடு­களுக்குச் சென்­றி­ருப்­போர் முற்­றி­லும் கடை­பி­டிக்க வேண்­டும்.

சிங்­கப்­பூ­ருக்கு நவம்­பர் 12க்கும் 27ஆம் தேதிக்­கும் இடை­யில் வந்த பய­ணி­கள், சிங்­கப்­பூர் வருவ­தற்கு 14 நாட்­க­ளுக்கு முன் ஓமிக்­ரான் பாதித்­துள்ள நாடு­க­ளுக்குச் சென்று இருந்தால்­ அவர்­கள் ஒரு நேர பிசி­ஆர் பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டும்.

பாதிக்­கப்­பட்­டுள்ள நாடு­களில் இருந்து வரும் விமா­னங்­களில் பணி­யாற்­றும் ஊழி­யர்­கள் தரை­யி­றங்­கி­ய­தும் பிசி­ஆர் பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டும். பிறகு மூன்­றா­வது நாளன்­றும், ஏழா­வது நாளன்­றும் பிசி­ஆர் பரி­சோதனைக்கு உட்­பட வேண்­டும்.

இதர விமா­ன­ நி­லைய, எல்லைப்புற முன்­க­ளப் பணி­யா­ளர்­கள் வாராந்­திர ஏஆர்டி அடிப்­படை­யி­லான பரி­சோ­த­னைக்கு தொடர்ந்து உட்­ப­டுத்­தப்­ப­டு­வர்­. தொற்று இருப்­ப­தாக தெரி­ய­வந்­தால் பிசி­ஆர் பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டும்.