எல்லைப்புற பணியாளர்களுக்கு வாராந்திர பிசிஆர் பரிசோதனை

விமான நிலை­யத்­தில், எல்லைப் புறங்­களில் வேலை பார்க்­கும் முன்­ க­ளப் பணி­யா­ளர்­க­ளுக்குப் புதிய ஓமிக்­ரான் கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்ட வட்­டா­ரங்­களில் இருந்து வரும் பய­ணி­க­ளு­டன் அணுக்­கத் தொடர்பு ஏற்படக்­கூ­டிய வாய்ப்­பு உண்டு.

ஆகை­யால், அந்த ஊழி­யர்­கள் நாளை முதல் வாராந்­திர பிசி­ஆர் பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டும். ஓமிக்­ரான் கிருமி சிங்­கப்­பூரில் நுழை­வ­தைத் தடுக்­கும் முதல்­நிலை அர­ணாக எல்­லை­களே இருக்­கின்­றன என்­பதே இதற்­கான கார­ணம் என்று சுகா­தார அமைச்சு நேற்று செய்தி அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

விமா­ன­ நி­லைய ஊழி­யர்­கள் இப்­போது தொற்று ஆபத்­துள்ள நாடு­க­ளுக்கு ஏற்ப ஏஆர்டி சோதனை­களை ஒவ்­வொரு ஏழு நாட்­க­ளுக்­கும் ஒரு முறை அல்லது இரண்டு முறை செய்­து­கொள்­கிறார்­கள்.

பரி­சோ­த­னை­களை தீவி­ரப்­படுத்­தும் முயற்­சி­யாக வாராந்­திர பிசிஆர் பரி­சோ­தனை நடை­முறை இடம்­பெ­று­கிறது என்று நேற்று அமைச்­சு­கள்­நிலை கொவிட்-19 பணிக்­குழு இணைத் தலை­வர்­களில் ஒரு­வ­ரான லாரன்ஸ் வோங் தெரி­வித்­தார்.

பய­ணி­க­ளு­டன் தொடர்­பு­கள் ஏற்­ப­டும் நிலை­யில் உள்ள எல்லைப்­புற ஊழி­யர்­கள், விமான நிலை­யங்­கள், கடல், தரை சோத­னைச்­சா­வ­டி­களில் பணி­யாற்­று­வோர் ஆகி­யோர் எல்­லைப்­புற முன்­களப் பணி­யா­ளர்­களில் அடங்­கு­வர் என்றார் திரு வோங்.

பாதிக்­கப்­பட்டு உள்ள நாடு­களில் இருந்து வரும் விமா­னங்­களில் சேவை­யாற்­றும் விமான ஊழி­யர்­கள் தரை­யி­றங்­கி­ய­தும் பிசி­ஆர் பரி­சோ­த­னைக்கு உட்­படு­வார்­கள். அதற்­குப் பிறகு விமானப் பணி ஏற்­கும் ஒவ்­வொரு முறையும் மூன்­றாம், ஏழாம் நாட்­களில் அவர்­கள் பிசி­ஆர் பரி­சோ­த­னைக்கு உப்­பட வேண்­டும்.

இதர விமா­ன­ நி­லைய, எல்லைப்­புற முன்­க­ளப்பணி­யா­ளர்­கள் தொடர்ந்து ஏஆர்டி அடிப்­ப­டை­யிலான பரி­சோ­தனை ஏற்­பா­டு­களுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள்.

இருந்­தா­லும் ஒரு கூடு­தல் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக இத்­த­கைய ஊழி­யர்­களில் யாருக்­கா­வது ஏஆர்டி சோத­னை­யில் தொற்று இருப்­ப­தாக தெரி­ய­வந்­தால், அவர் பிசி­ஆர் பரி­சோ­தனைக்கு உட்­பட வேண்டி இருக்­கும் என்று அமைச்சு தெரி­வித்­தது.

குணமடைந்தவர்கள் உட்பட, எல்­லைப்புறங்­களில் வேலை செய்யும் முன்­க­ளப் பணி­யா­ளர்­கள் அனை­வ­ரும் காலக்­கி­ரம முறைப்­படி­யான பரி­சோ­தனை ஏற்­பாட்டுக்கு உட்­படவேண்­டும்.

நமது எல்­லை­யில் யாருக்­காவது ஓமிக்­ரான் தொற்று ஏற்­பட்­டால் இந்த ஏற்­பா­டு­க­ளின் மூலம் நாம் அதைச் சரி­யான நேரத்­தில் சிறந்த முறை­யில் கண்டு­பிடித்­து­வி­ட­லாம் என்று அமைச்சு விளக்­கி­யது.

தென்­னாப்­பி­ரிக்­கா­வில் தலை­காட்டி பல நாடு­க­ளி­லும் பர­வத் தொடங்கி உள்ள புதிய உரு­மாறிய கொவிட்-19 ஓமிக்­ரான் கிரு­மியைத் தவிர்த்­துக்­கொள்­ளும் வகை­யில் நாளை இரவு 11.59க்குப் பிறகு சிங்­கப்­பூர் வரும் பய­ணி­கள் அனை­வ­ருக்­கும் பரி­சோ­தனை நடை­மு­றை­களை சிங்­கப்­பூர் மேம்­படுத்­து­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!