1,103 பேருக்கு கிருமித்தொற்று

1,103 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
346893f6-993b-4c51-9758-64458ff3638b
-

சிங்­கப்­பூ­ரில் திங்­கட்கிழமை புதி­தாக 1,103 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­தி­யா­ன­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. அவர்­களை­யும் சேர்த்து கொரோனா கிருமி தொற்­றி­யோ­ரின் மொத்த எண்­ணிக்கை 263,486 ஆகி­யது.

வாராந்­திர தொற்று அதி­க­ரிப்பு விகி­தம் ஞாயிற்­றுக்­கி­ழமை 0.69ஆக இருந்­தது. இந்த அதி­க­ரிப்பு விகி­தம் தொடர்ந்து 17 நாட்­களாக ஒன்றுக்கும் குறை­வா­கவே இருந்து வரு­கிறது. புதிய வாராந்­திர தொற்று எண்­ணிக்கை குறைந்து வரு­வதை இது காட்­டு­ கிறது.

கொரோனா கார­ண­மாக ஒன்­பது பேர் மர­ண­ம­டைந்­த­னர். அவர்­க­ளுக்கு வயது 58 முதல் 91 வரை. தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத ஒரு­வ­ரைத் தவிர மாண்­ட­வர்­கள் அனை­வ­ருக்­கும் பல்­வேறு உடல்­ந­லப் பிரச்­சி­னை­கள் இருந்­தன. கொவிட்-19 மொத்த மரண எண்­ணிக்கை 710 ஆகி உள்­ளது.

புதி­தா­கக் கிருமி தொற்­றி­யோரில் 1,070 பேர் சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்­கள். அவர்­களில் 183 பேருக்கு வயது 60 மற்­றும் அதற்­கும் அதி­கம். வெளி­நாட்டு ஊழி­யர் விடு­தி­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் 25 பேர். எட்­டுப் பேர் வெளி­நாடு­களில் இருந்து வந்­த­வர்­கள் என்று அமைச்சு தெரி­வித்­தது.

தீவிர சிகிச்­சைப் பிரிவு பயனீட்டு அளவு திங்­கட்கிழமை 51.2% ஆக இருந்­தது.