இர்ஷாத் முஹம்மது
நான்கு மாதக் குழந்தையை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு வந்த அருள்மணி, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தனது இரண்டு பிள்ளை
களையும் கட்டிப்பிடித்து அர
வணைக்கக் காலை ஐந்து மணிக்கே சாங்கி விமான நிலையத்தை வந்தடைந்தார்.
தமது மனைவி, இரு மகள்களும் நேற்றுக் காலை சாங்கி விமான நிலையத்தின் முனையம் மூன்றில் வந்திறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானத்தில் சென்னையிலிருந்து வந்தனர்.
இவரைப்போலவே சிங்கப்பூரரான 42 வயது சாந்தினி செல்வ மும் பாசம் பொங்கக் காத்திருந் தார். தமது அம்மாவும் அப்பாவும் பெட்டிகளைத் தள்ளுவண்டியில் வைத்துக்கொண்டு பொது வருகை யாளர் வரவேற்பு இடத்தில் வெளியேறியதுமே கண்ணீர்மல்க கையசைத்து வரவேற்றார் அவர்.
இருப்பினும் அவர்களைக் கட்டிப்பிடித்து ஆரத்தழுவ இன்னும் சற்று தொலைவே இருந்தது.
வெளியேறிய வருகையாளர்கள் கொவிட்-19 பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் ஆவலுடன் காத்திருந்த அவர், பரிசோதனை முடிந்து திரும்பிய பெற்றோரைக் கட்டிப்பிடித்து மனநிம்மதியில் பெருமூச்சு விட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பணி ஓய்வுபெற்ற அப்பா, சென்னையில் தமது ஓய்வுக்காலத்தைச் செலவிட எண்ணி அம்மாவுடன் சென்றார். ஆனால் கொரோனாவின் சீற்றம் அவர்களை மீண்டும் சிங்கப்பூருக்கு வரவோ பிள்ளைகள் அவரைச் சென்று சென்னையில் பார்க்கவோ வாய்ப்பு வழங்கவில்லை. பரவல் அதிகமிருந்த காலத்தில் வீட்டை விட்டுகூட வெளியே வராமல் இல்லத்திலேயே முடங்கிய நிலையில் ஓய்வுக் காலத்தை இதுவரை செலவிட்டு நேற்றுக் காலை சிங்கப்பூர் வந்து அடைந்தனர்.
"அவர்களை நேரில் பார்த்து வரவேற்பதில் விவரிக்க முடியாத மனநிம்மதி அடைகிறேன்," என்று ஆனந்தக் கண்ணீரை விட்டபடி கூறினார் சாந்தினி.
கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் பயணிகள் சேவையை சென்னையிலிருந்து தொடங்கிய சிங்கப்பூர் ஏர்லைன் ஸின் முதல் விமானம் நேற்று காலை 5.35 மணிக்கு சாங்கி விமான நிலையத்தை வந்தடைந்தது. கொவிட்-19 நோய்ப் பரவல் சூழல் காரணமாக இந்தியாவின் எல்லா நகரங்களுக்கும் வெளிநாட்டு விமானங்கள் வர்த்தகப் பயணிகள் சேவையை வழங்குவதை இந்திய அரசு கடந்த ஆண்டு நிறுத்தியது.
அண்மையில் இரு நாட்டு அரசாங்கங்களும் செய்துகொண்ட ஒப் பந்தத்தின் விளைவாக மீண்டும் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் 'வேக்சினேடட் டிராவல் லேன்' (விடிஎல்) எனும் தடுப்பூசி போட்டோருக்கான பயணத்தடத் திட்டத்தின்வழி சென்னை, மும்பை, புதுடெல்லி ஆகிய நகரங்களிலிருந்து தினமும் தலா இரண்டு சேவைகள் நவம்பர் 29ஆம் தேதியிலிருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
'விடிஎல்' திட்டத்தின்கீழ் வந்து இறங்கிய பயணிகள் உணர்ச்சி பொங்கக் காட்சியளித்தனர். சிலருக்குப் புது நட்புகளும் கிடைத்துள்ளன. சென்னை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் வந்தடையும்வரை திக்குமுக்காடி நின்ற சதாசிவனுக்கு உதவிய அப்துல் ரஹீம், சாங்கி விமான நிலையத்தில் விடைபெறும்போது கை
குலுக்கி, "மீண்டும் சந்திப்போம். வீட்டிற்கு வாருங்கள்," என்று நன்றி உணர்வோடு கூறினார்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் குமார், கட்டு
மானத் துறையில் பணிபுரிய சிங்கப்பூர் வந்தார்.
"வழக்கமாக மதுரையிலிருந்து வருவேன். எனது முதலாளி இந்த முறை சென்னையிலிருந்து வரச் சொன்னார். வந்தடையும் வரை எல்லாத் தகவல்களும் தெளிவாகவே இருந்தன. என்னென்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் சுமுகமாக இருந்தது," என்று கூறினார் வினோத்.
ஒரே நிறுவனத்தில் பணிபுரிய வந்திருந்த ஐவரில் அவரும் ஒருவர். வெவ்வேறு காரணங்களுக்காக இந்தியாவிற்குச் சென்றவர்கள், அல்லது வேலைக்காக சிங்கப்பூர் வர காத்திருந்தோருக்கு விடியலைத் தந்துள்ளது 'விடிஎல்' திட்டம்.
"திட்டத்தை இந்தியாவிலிருந்து வருவோர்க்கும் நீட்டிக்க இருப்பதை சிங்கப்பூர் அரசாங்கம் கூறி
யதுமே விமானப் பயணச் சீட்டு விற்பனை விற்பனை தொடங்கிவிட்டதா என்பதை அறிய ஆவலுடன் காத்திருந்தேன். விற்பனை தொடங்கிய முதல் நாளிலேயே பெற்றோருக்காக பயணச்சீட்டுகளை வாங்கினேன்," என்றார் சாந்தினி.
சென்னையிலிருந்து சிங்கப்பூர் வந்திறங்கிய முதல் எஸ்ஐஏ 'விடிஎல்' விமானம்

