உணவு வாங்கிச் செல்லும் போக்கு அதிகரிப்பு: ஆய்வு

உணவு வாங்கிச் செல்லும் போக்கு அதிகரிப்பு: ஆய்வு

2 mins read
1ee850b7-0500-4956-be30-c15f3ce805c6
-

உணவு விநி­யோ­கத்­தைக் காட்­டி­லும் உணவு வாங்­கிச் செல்­லும் போக்கு இவ்­வாண்டு அதி­க­ரித்து உள்ளதாக வாடிக்­கை­யா­ளர் மன­நி­றைவு ஆய்வு தெரி­விக்­கிறது.

கொவிட்-19 தொடர்­பான பாது­காப்பு நிர்­வாக நடை­மு­றை­க­ளி­லும் உண­வ­கங்­களில் உட்­கார்ந்து சாப்­பி­டு­வது தொடர்­பான விதி

­க­ளி­லும் அடிக்­கடி மாற்­றம் அறி­விக்­கப்­பட்ட நிலை­யி­லும் உணவு வாங்­கிச் செல்­லும் பழக்­கம் வள­ரு­வ­தாக ஆய்வு குறிப்­பி­டு­கிறது.

உண­வ­கங்­கள், விரைவு உண வகங்­கள், காப்­பிக் கடை­கள் போன்­ற­வற்­றிற்கு நேரில் வந்து வாங்­கிச் செல்­வது இவ்­வாண்­டின் மூன்­றாம் காலாண்­டில் கடந்த ஆண்­டின் மூன்­றாம் காலாண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் அதி­க­ரித்­துள்­ளது. இந்த வரு­டாந்­திர ஆய்­வின் முடி­வு­கள் நேற்று வெளி­

யி­டப்­பட்­டன.

சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­

க­லைக்­க­ழ­கத்­தில் உள்ள சேவை உன்­னத பயிற்சி மையம் இந்த ஆய்வை நடத்­தி­யது.

சுற்­றுப் பய­ணத் துறை­க­ளி­லும் உணவு, பானம் தொடர்­பி­லும் வாடிக்­கை­யா­ளர்­கள் கொண்­டி­ருக்­கும் மனப்­போக்­கின் அடிப்

­ப­டை­யில் ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

இவ்­வாண்டு ஜூலை மாதத்­திற்­கும் செப்­டம்­பர் மாதத்­திற்­கும் இடைப்­பட்ட காலப்பகு­தி­யில் சுமார் 2,600 பேரி­டம் ஆய்வு நடத்­தப்­பட்­டது.

தாங்­கள் விரும்­பும் உண­வைப் பெற உண­வ­கத்­திற்­குச் சென்று சாப்­பி­டு­வீர்­களா, உண­வ­கத்­தில் அதனை வாங்­கிச் செல்­வீர்­களா அல்­லது வீட்­டி­லி­ருந்­த­படி உணவு விநி­யோ­கத்­திற்கு ஏற்­பாடு செய்­வீர்­களா என்­னும் கேள்­வி­கள் அவர்­க­ளி­டம் கேட்­கப்­பட்­டன.

அதே­நே­ரம் உணவு, பான நிலை­யங்­கள், உண­வ­கங்­கள், விரைவு உண­வ­கங்­கள், காப்­பிக் கடை­கள் ஆகி­ய­வற்­றில் எதனை நோக்கி அடிக்­கடி செல்­வீர்­கள் என்ற கேள்­வி­யும் எழுப்­பப்­பட்­டது.

உண­வ­கங்­க­ளுக்­குச் சென்று உணவு வாங்­கிச் செல்­வ­தாக 32.7% பேர் கூறி­னர். இது கடந்த ஆண்டு 25.9% ஆக இருந்­தது. விரைவு உண­வ­கங்­களில் இருந்து வாங்­கிச் செல்­வோர் விகி­த­மும் 49.4 விழுக்­காட்­டி­லி­ருந்து 57.4 விழுக்­காட்­டுக்கு உயர்ந்­துள்­ளது.