130 மாணவர் நலன் அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை

130 மாணவர் நலன் அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை

1 mins read
8c282f73-0db6-4f45-be15-959a8d73fc35
-

தொடக்­கப் பள்­ளி­க­ளி­லும் உயர்

­நி­லைப் பள்­ளி­க­ளி­லும் அடுத்த ஆண்டு இறு­திக்­குள் 130 மாண­வர் நல்­வாழ்வு அதி­கா­ரி­களை நியமிக்க கல்வி அமைச்சு முயன்று வரு­கிறது.

ஆபத்­தில் உள்ள மாண­வர்­

க­ளுக்கு உதவ தமது அமைச்சு எடுத்து வரும் முயற்­சி­களை விளக்­கும் நிகழ்ச்சி ஒன்­றில் நேற்று முன்­தி­னம் பங்­கேற்­றுப் பேசிய இரண்­டாம் கல்வி அமைச்­சர் மாலிக்கி ஒஸ்­மான் இத்­த­க­வ­லைத் தெரி­வித்­தார். பள்­ளிக்கு வராத மாண­வர்­க­ளின் தேவை­க­ளைக் கண்­ட­றி­வ­தில் இத்­த­கைய மாண­வர் நலன் அதி­கா­ரி­கள் கவ­னம் செலுத்­து­வர்.

இதற்­காக ஆசி­ரி­யர்­க­ளு­ட­னும் சமூ­கப் பங்­கா­ளி­க­ளு­ட­னும் இணைந்து அவர்­கள் பணி­யாற்­று­வர். தற்­போது 105 மாண­வர் நல்­வாழ்வு அதி­கா­ரி­கள் பள்­ளி­களில் சேவை­யாற்­று­கின்­ற­னர்.

எளி­தில் ஆபத்­தில் சிக்­கக்­

கூ­டிய மாண­வர்­கள் மற்­றும் அவர்­

க­ளின் குடும்­பங்­களை ஆத­ரிக்க ஏற்படுத்தப்பட்ட 'அப்­லி­ஃப்ட்' என்­னும் பல்­வேறு அமைப்­பு­க­ளின் பணிக்­குழுவுக்கு டாக்­டர் மாலிக்கி தலைமை ஏற்­றுள்­ளார். நீண்­ட­கா­ல­மாக பள்­ளி­க­ளுக்கு வரா­தது, சட்ட வழக்­கு­க­ளைச் சந்­திப்­பது போன்ற கடும் நெருக்­க­டிக்கு ஆளா­கும் மாண­வர்­க­ளு­டன் நல்­வாழ்வு அதி­கா­ரி­கள் இணைந்து பணி­யாற்­று­வார்­கள் என்று அவர் கூறியுள்ளார்.