மேலும் 70 உணவங்காடி நிலையங்கள் தடுப்பூசி போட்ட ஐவரை அனுமதிக்கும்

2 mins read
16ce0bbd-f053-4d0d-a789-d4d985bc1f9d
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் சி யுவான் உணவங்காடி நிலையத்தில் காணப்பட்ட வாடிக்கை யாளர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

முழுமையாகத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட வெவ்­வேறு குடும்­பங்­

க­ளைச் சேர்ந்த ஐந்து பேர் ஒரு குழு­வாக அமர்ந்து சாப்­பிட அனு

­ம­திக்­கப்­படும் உண­வங்­காடி நிலை­யங்­க­ளின் எண்­ணிக்கை நேற்று அதி­க­ரிக்­கப்­பட்­டது.

ஏற்­கெ­னவே 32ஆக இருந்த அத்­த­கைய உண­வங்­காடி நிலை­யங்­க­ளின் எண்­ணிக்­கை­யில் மேலும் 70 சேர்க்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து அந்த எண்­ணிக்கை 102 ஆகி­விட்­டது. இவை தவிர மேலும் எட்டு உண­வங்­காடி நிலை­யங்­களில் பழுது­ பார்ப்பு, மறு­சீ­ர­மைப்பு போன்ற பணி­கள் நடப்­ப­தால் அவை திறக்­கப்­பட்­ட­தும் இந்­தப் பட்­டி­ய­லில் சேர்க்­கப்­ப­டும் என தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் அதன் இணை­யத்­த­ளத்­தில் குறிப்­பிட்­டுள்­ளது.

அவ்­வாறு சேர்க்­கப்­பட்ட பின்­னர் தீவு முழு­வ­தும் தடுப்­பூசி போட்ட ஐவரை அனு­ம­திக்­கும் உண­வங்­காடி நிலை­யங்­க­ளின் எண்­ணிக்கை 110க்கு அதி­க­ரித்­து­வி­டும் என்று 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' அறி­கிறது. இந்த எட்டு உண­வங்­காடி நிலை­யங்­களில் புளோக் 159 மெய் சின் ரோடு, காலாங் எஸ்­டேட் சந்தை, அமோய் ஸ்தி­ரீட் உணவு நிலை­யம் மற்­றும் டன்­மன் உணவு நிலை­யம் போன்­ற­வை­யும் அடங்­கும்.

புதுப்­பிக்­கப்­பட்ட பின்­னர் இந்த நான்கு உண­வங்­காடி நிலை­யங்­களும் திறக்­கப்­படும் நாள்­கள் டிசம்­பர் 9 முதல் அடுத்த ஆண்டு பிப்­ர­வரி 28 வரை குறிக்­கப்­பட்­டுள்­ளன.

மேலும், இந்த உண­வங்­காடி நிலை­யங்­கள் அனைத்­தும் தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் அல்­லது அந்த வாரி­யத்­தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நிறு­வ­னங்­க­ளால் நடத்­தப்­ப­டு­பவை என்­றும் அந்த செய்­தித்­தாள் தெரிந்து­கொண்­டது.

தடுப்­பூசி போட்­ட­வர்­க­ளுக்­கென தனிச்­ச­லுகை காட்­டப்­படும் நட­

வ­டிக்­கை­யில் மேலும் ஒரு படி­யாக இதில் பங்­கேற்­கும் உண­வங்­காடி நிலை­யங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­பட்டு வரு­கிறது.

உண­வங்­காடி நிலை­யங்­க­ளுக்­கான கட்­டுப்­பாடு நவம்­பர் 23ஆம் தேதி முதல் படிப்­ப­டி­யா­கத் தளர்த்­தப்­பட்டு வரு­கிறது. தொடக்­க­மாக, 11 உண­வங்­காடி நிலை­யங்­களும் 7 காப்­பிக் கடை­களும் தடுப்­பூசி போட்ட ஐவரை ஏற்க அனு­ம­திக்­கப்­பட்­டது. இந்­தப் பட்­டி­ய­லில் ஆக அதி­க­மான எண்­ணிக்­கை­யி­லான உண­வங்­காடி நிலை­யங்­க­ளைச் சேர்க்­கும் அறி­விப்பு நேற்று வெளி­யி­டப்­பட்­டது.

தடுப்­பூசி போட்­ட­வர்­க­ளுக்­கான இந்த உண­வங்­காடி நிலை­யங்­களில் தடுப்­பூசி போட்­டுக் கொள்­ளா­த­வர்­களும் ஒரு தடுப்­பூசி மட்­டும் போட்­டுக்­கொண்­ட­வர்­களும் உட்­கார்ந்து சாப்­பிட அனு­மதி இல்லை. இருப்­பி­னும் அவர்­கள் தங்­க­ளுக்­கான உணவை வாங்­கிச் செல்­ல­லாம்.

உண­வங்­காடி நிலை­யங்­கள் தவிர, முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட ஐவரை அனு­ம­திக்­கும் பட்­டி­ய­லில் உள்ள காப்­பிக் கடை­க­ளின் எண்­ணிக்கை திங்­கட்­கி­ழமை 71க்கு அதி­க­ரித்­தது. அதற்கு முன்­னர் வரை அந்த எண்­ணிக்கை 54ஆக இருந்­தது. சிங்­கப்­பூர் உணவு முகவை (எஸ்­எ­ஃப்ஏ) இவற்­றைப் பட்­டி­ய­லிட்டுள்­ளது.