தடுப்பூசி சமநிலைக்கான நினைவூட்டலே ஓமிக்ரான தொற்று
தடுப்பூசி சமநிலை மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றின் அவசியத்துக்கான நினைவூட்டலே புதிய கொவிட்-19 வகை ஓமிக்ரான் தொற்று என்று டாக்டர் நியோலீன் ஹேஸர் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் முன்னின்று நடத்தும் உலக ஆட்சிமுறைக் குழு என்னும் 30 நாடுகள் ஒன்றிணைந்த நிகழ்வு தடுப்பூசி பன்முகத்தன்மையின் முக்கியத்துவம் மீது கவனம் செலுத்துகிறது. உலக சுகாதாரப் பாதுகாப்பில் நிலவும் இடைவெளியை நீக்க தடுப்பூசி சமநிலைக்கு சிறிய நாடுகள் குரல் கொடுத்து வருவதாகவும் அதன் முன்னோடியாக இந்நிகழ்வு அமைவதாகவும் டாக்டர் ஹேஸர் தெரிவித்துள்ளார். 'நமது எதிர்காலத்தைக் காப்பதில் சிங்கப்பூரும் பன்முக ஆட்சிமுறையும்' என்னும் சொற்பொழிவுத் தொடரில்
பங்கேற்று அவர் ேபசினார்.
முதலீடுகளில் தொற்றுநோய் தாக்கம் குறித்து அதிபர் ஆலோசனை
அடுத்த ஆண்டுக்கான அரசாங்க வரவுசெலவுத் திட்ட அறிக்கையைத் தயார் செய்வதற்கான பணிகள் தொடங்கி விட்டன. சிங்கப்பூரின் சொத்துகள் மீது எதிர்பார்க்கப்படும் நீண்டகால நிகர்நிலை வருமான விகிதம் தொடர்பாக நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங்குடனும் இதர அதிகாரிகளுடனும் அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். கொவிட்-19 நிலவரமும் பருவநிலை மாற்றமும் முதலீடுகளை எவ்வாறு பாதிக்கும் என்பதன் மீது கவனம் செலுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. அரசாங்கம் அதன் வருடாந்திர வரவுசெலவுத் திட்டத்தில் தற்போதைய தேவைகளுக்கு நிதி கையிருப்பிலிருந்து எவ்வளவு சேர்க்கலாம் என்பது தொடர்பான அம்சங்கள் என்பதால் இந்த ஆலோசனை முக்கியமாக நடத்தப்பட்டது.
உணவகத்தில் தீ: 20 பேர் தப்பினர்
திங்கட்கிழமை இரவு 812 நார்த் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள ஓர் உணவகத்தில் திடீரென தீ மூண்டதைத் தொடர்ந்து அங்கிருந்து 20 பேர் வரை தாமாக வெளியேறிவிட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) தெரிவித்தது. சம்பவம் குறித்துத் தங்களுக்கு இரவு 8.45 மணிவாக்கில் தகவல் கிடைத்ததாக அந்தப் படை 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளிடம் கூறியது. தீப்பிடித்த இடத்தில் 'நன் ஹுவா சாங் ஃபிஷ்-ஹெட்' உணவகம் இருந்ததை அந்த செய்தித்தாள் கண்டறிந்தது. உணவகத்தின் சமையலறையில் இருந்த காற்று வெளியேற்றக் கருவியில் தீப்பற்றி எரிந்ததாகவும் இரண்டு தண்ணீர் பீய்ச்சும் இயந்திரம் மூலம் தீ அணைக்கப்பட்டுவிட்டதாகவும் இச்சம்பவத்தில் எவருக்கும் காயமில்லை என்றும் எஸ்சிடிஎஃப் தெரிவித்தது. அடுப்பு, அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் காற்று வெளியேற்றக் கருவிகள் எண்ெணய்ப்பிசுக்கு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுமாறும் அக்கருவிகளை முறையாகப் பராமரிக்குமாறும் பொது
மக்களை எஸ்சிடிஎஃப் கேட்டுக்கொண்டது.

