உணவு விநியோக ஊழியரை தாக்கியவர்க்கு சிறைத் தண்டனை

உணவு விநியோக ஊழியரை தாக்கியவர்க்கு சிறைத் தண்டனை

1 mins read
fa5f1ea8-e597-41be-baab-1ba7d3ade417
-

தங்­க­ளுக்கு நடு­வில் மிதி­வண்டி ஓட்­டிச் சென்ற 'கிராப்­ஃபுட்' விநி­யோக ஊழி­யரை, ஒரு தம்­பதி தாக்­கி­யி­ருந்­த­னர்.

இதன் தொடர்­பில் நேற்று 33 வயது வான் ஃபாரா ஷிரின் அபு ஹசான் என்­ப­வ­ருக்­குக் கிட்­டத்­தட்ட ஐந்து மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

முன்­னாள் காத­ல­ரு­டன் ஃபாரா சேர்ந்து விநி­யோக ஊழி­ய­ரைத் தகாத சொற்­க­ளால் திட்­டி­ய­து­டன், ஊழி­ய­ரது தலையை ஃபாரா அடித்­த­தா­க­வும் கூறப்­பட்­டது.

ஊழி­ய­ரின் வயிற்றை இரு முறை ஃபாரா உதைத்­த­து­டன் தனது கைப்­பை­யைக் கொண்டு ஊழி­ய­ரைத் தாக்­கி­யும் இருந்­தார்.