குடியிருப்புகளின் குப்பையை அகற்றும் கட்டணம் ஜனவரி 1 முதல் அதிகரிக்க உள்ளது

குடியிருப்புகளின் குப்பையை அகற்றும் கட்டணம் ஜனவரி 1 முதல் அதிகரிக்க உள்ளது

1 mins read
318f6531-b58b-4f7e-9733-1c96716bfdd5
-

வீடு­க­ளின் குப்­பை­களை அகற்றுவதற்கு விதிக்­கப்­படும் கட்­ட­ணம் அடுத்த ஆண்டு ஜன­வரி 1ஆம் தேதி முதல் அதி­க­ரிக்க உள்­ளது. செயல்­பாட்டு, மனி­த­வளச் செல­வு­கள் அதி­க­ரித்­துள்­ள­தால் கட்­ட­ணம் உயர்த்­தப்­ப­டு­வ­தாகக் கூறப்­பட்­டது.

பொதுக் கழி­வு­கள் அகற்றப்படும் திட்­டத்­தின்­கீழ் உள்ள வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­களும் கூட்­டு­ரிமை வீடு­களும் அடங்­கிய குடி­யி­ருப்­பு­க­ளுக்கு தற்­போது மாதம் $8.25 கட்­ட­ணம் விதிக்­கப்­ப­டு­கிறது. இது $9.63ஆக உய­ர­வுள்­ளது.

தரை­வீ­டு­களில் உள்­ளோர், மாதம் $32.07 கட்­ட­ணம் செலுத்­து­வர் என்று தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் நேற்று தெரி­வித்­தது. 2017ஆம் ஆண்­டுக்­குப் பிறகு கட்­ட­ணங்­கள் அதி­க­ரித்­தி­ருப்­பது இதுவே முதல் முறை என்று கூறப்­பட்­டது.