யோகா வகுப்புகளின்போது பெண்கள் ஐவரைத் தகாத முறையில் தீண்டியதாக யோகா பயிற்சியாளர் மீது நேற்று குற்றம் சாட்டப்பட்டது.
தற்போது வேலையில்லாத அந்த 32 வயது இந்திய நாட்டவர் மீது 10 மானபங்க குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஆடவர் 2019ஆம் ஆண்டுக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் பெண்களின் அந்தரங்க உடல் பாகங்களைத் தொட்டதாகக் கூறப்படுகிறது. காணொளி இணைப்பு வழி நேற்று ஆடவர் நீதிமன்றத்தில் முன்னிலையானார். $15,000 பிணைத் தொகையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆடவர் மீதான வழக்கு விசாரணை இம்மாதம் 14ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஏப்ரல் 2018ல், யோகா பயிற்சியாளராக இருந்த வேறொரு இந்திய நாட்டவர்க்கு ஒன்பது மாதச் சிறைத் தண்டனையும் $1,000 அபராதமும் விதிக்கப்பட்டன.
தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்த அந்த ஆடவர்க்கு, பின்னர் சிறைத் தண்டனை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டதுடன் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

