சிங்கப்பூர் அதன் தங்க இருப்புகளை இவ்வாண்டு தொடக்கத்தில் கிட்டத்தட்ட 20% அதிகமாக்கி இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் அனைத்துலக இருப்புநிதி மற்றும் அந்நிய செலாவணி பணப்புழக்க அறிக்கைகளின் தரவுகள் குறிப்பிட்டுள்ளன.
இவ்வாண்டு மே, ஜூன் மாதங்களில் 26.3 டன்கள் மதிப்புடைய கொள்முதல் இருந்ததெனக் கூறப்படுகிறது. 2000ஆம் ஆண்டுக்குப் பின் முதல்முறையாக தங்க இருப்பில் அதிகரிப்பு ஏற்பட்டது, அனைத்துலக நாணய நிதியத்தின் மாதாந்திர அறிக்கையில் தெரியவந்தது. பணவீக்க அபாயத்திற்கு எதிரான நீண்டகால முதலீடாக தங்கம் கருதப்படுகிறது.

