தொடக்கநிலை ஐந்தில் படித்துக்கொண்டிருந்த மகளை, தன்னுடைய காதலன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியபோது, உதவிக்காக அந்தச் சிறுமி கால்களைச் சிறுமியின் தாய் பிடித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அத்துடன் மாது தன் காதலனுடன் பாலியல் செயலில் ஈடுபட்டபோதெல்லாம் சிறுமியைப் பார்க்கும்படி வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. நேற்று 62 வயதுடைய அந்த மாது, அவரின் காதலனான 70 வயது ஆடவர் இருவர் மீதுமான வழக்கு, உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
தன் மகளுக்கு 2012ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அளித்த ஆடவர்க்கு உடந்தையாக அந்தச் சிறுமியின் தாயார் இருந்திருக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சிறுமி தனக்கு நடந்ததைப் பற்றி காதலனிடம் கூறியதை அடுத்து போலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
சிறுமியின் காதலனும் இரு சகோதரர்களும் சாட்சியம் அளிப்பர் என்று கூறப்படுகிறது.

