தடுப்பூசிக்கு எதிரான குழுவை நிறுவியவர் மன்னிப்புக் கேட்டார்

தடுப்பூசிக்கு எதிரான குழுவை நிறுவியவர் மன்னிப்புக் கேட்டார்

1 mins read
9dae244e-1cb9-4f42-8bc1-df498786a36d
-

கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூசிக்கு எதிர்ப்பு தெரி­விக்­கும் குழு ஒன்­றின் நிறு­வ­னர் திரு­வாட்டி ஐரிஸ் கோ, நேற்று முன்­தி­னம் ஃபேஸ்புக் பதிவு ஒன்­றில் மன்­னிப்பு கோரி­யி­ருந்­தார்.

பொது­மக்­கள் தொடர்­பு­கொள்­வ­தற்­காக இயங்கி வரும் தொலை­பேசி எண்­களில் விடாது தொடர்பு­கொண்டே இருக்­கு­மாறு டெலி­கிராமில் தமது 'ஹீலிங் தி டிவைட்' குழு­வில் உள்­ளோ­ரி­டம் கூறி­யி­ருந்­தது தொடர்­பில் அவர் மன்­னிப்பு கேட்­டுள்­ளார்.

"எந்த ஒரு முக்­கிய கார­ண­மும் இல்­லா­மல் தொலை­பேசி அழைப்பு நிலை­யத்­திற்­குத் தொடர்ந்து அழைத்­துக்­கொண்டே இருங்­கள் என்று கூறி­யது நிச்­ச­யம் தவ­று­தான்," என்று பதி­வில் அவர் குறிப்­பிட்டு இருந்­தார். திரு­வாட்டி கோ அக்­டோ­பர் 11ஆம் தேதி­யன்று அந்­தத் தவ­றான கருத்தை வெளி­யிட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

தடுப்­பூசி அடிப்­ப­டை­யில் வேறு­படுத்­தப்­பட்ட பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படு­வ­தற்கு முன்­ன­தாக அவர் இக்­கருத்தை வெளி­யிட்­டி­ருந்­தார். இதற்­கி­டையே போலிஸ் விசா­ர­ணை­யில் தாம் உதவி வரு­வதை நேற்று முன்­தி­னம் அவர் உறு­திப்­ப­டுத்­தி­னார்.

சுகா­தார அமைச்சு, சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு, தேசிய பரா­ம­ரிப்பு ஆகி­ய­வற்­றின் தொடர்பு எண்­களில் அழைத்து கருத்து தெரி­வித்­து­விட்டு, மறு­நாளும் அழைக்­கு­மாறு பிற­ரி­டத்­தில் கூறிய இரு­வரை போலி­சார் விசா­ரித்து வரு­வ­தாக கடந்த வாரம் தெரி­விக்­கப்­பட்­டது. அவர்­களில் 45 வயது திரு­வாட்டி கோவும் ஒரு­வர். மற்­றொ­ரு­வர் 48 வயது திரு ரேமன்ட் இங் ஆவார்.