செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
af7ebd99-2332-4293-a591-1aab8d21c58b
-

பாண்டான் இலை பறிக்க அத்துமீறி நுழைந்தவர்க்கு சிறை

சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் (எஸ்ஏஎஃப்) பயிற்சி வளாகத்தினுள் அத்துமீறிச் சென்ற ஆடவர் ஒருவர்க்கு இரண்டு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் எஸ்ஏஎஃப் பயிற்சி வளாகத்தினுள் நுழைந்த 62 வயது செங் லீ மெங், அங்கு அதிகாரி ஒருவரால் நிறுத்தப்பட்டபோது தான் பாண்டான் இலைகள் பறிக்க வந்ததாகக் கூறியிருந்தார்.

வளாகத்தில் வேலை பார்க்கும் பூச்சி கட்டுப்பாட்டு ஊழியர் ஒருவரிடமிருந்து செங் சாவிகளைப் பெற்றுக்கொண்டதும் தெரியவந்தது. செங்குடன் வளாகத்திற்குச் சென்ற 63 வயது இங் கியோங் ஹோ என்பவர்க்கு ஆகஸ்ட் மாதம் அபராதம் விதிக்கப்பட்டது.

மின்னிலக்கமயமாகும் திட்டத்தின்கீழ் 78,000 நிறுவனங்கள் இணைந்துள்ளன

சிங்கப்பூரிலுள்ள நிறுவனங்கள் மின்னிலக்கமயம் ஆவதை ஊக்குவிப்பதே சிறிய, நடுத்தர நிறுவனங்களின் மின்னிலக்கமயமாதல் திட்டம். 2017ஆம் ஆண்டில் திட்டம் தொடங்கியதிலிருந்து 78,000க்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர நிறுவனங்கள் திட்டத்தின்கீழ் இணைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டில் மட்டுமே 40,000 நிறுவனங்கள் திட்டத்தில் சேர்ந்ததாக நேற்று தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார்.

$800 மி. ஒட்டுமொத்த விற்பனையில்

மீண்டும் கோல்டன் மைல் காம்பிளக்ஸ்

புகழ்பெற்ற சின்னமாக கருதப்படும் பீச் ரோட்டின் கோல்டன் மைல் காம்பிளக்ஸ், அக்டோபர் மாதத்தில் பழமை பாதுகாப்பு கட்டடமாக அறிவிக்கப்பட்டது. ஒட்டுமொத்த விற்பனைக்காக மீண்டும் அதே $800 மில்லியன் விலைக்கு கட்டடம் வந்துள்ளது. முன்னதாக ஏலம் ஏதுமின்றி முதல் கட்ட ஒப்பந்தம் முடிவுற்றது. இன்னும் 47 ஆண்டுகள் எஞ்சியுள்ள குத்தகைக் காலமுடைய இந்த 16 மாடி கட்டடத்தில், 718 நிலப்பட்டா பத்திரமுடைய இடங்கள் உள்ளன. வர்த்தகப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது இந்த கோல்டன் மைல் காம்பிளக்ஸ் கட்டடம்.