முழுநேர வேலையில் இருக்கும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளின் வேலை நேரம் குறைந்துள்ளது

முழுநேர வேலையில் இருக்கும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளின் வேலை நேரம் குறைந்துள்ளது

2 mins read
6a1533da-ea48-4241-b38c-051a596d8a44
-

முழு­நேர வேலை­யில் இருக்­கும் சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள் ஆகி­யோ­ரின் வாராந்­திர வேலை நேரம் பத்து ஆண்­டு­க­ளுக்கு முன்பிருந்ததுடன் ஒப்­பி­டு­கை­யில் குறைந்­தி­ருப்­ப­தாக மனி­த­வள அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இவ்­வாண்டு முழு­நேர வேலை­யில் இருக்­கும் ஊழி­யர்­கள் வாரத்­துக்கு சரா­ச­ரி­யாக 45 மணி நேரம் வேலை செய்­வ­தாக அமைச்சு வெளி­யிட்ட அறிக்கை தெரி­வித்­தது. 2010ஆம் ஆண்­டில் இருந்த நிலை­யை­விட இது ஏறத்­தாழ நான்கு மணி நேரம் குறைவு.

கடந்த ஆண்டு பதி­வான 45.4 மணி நேர வேலை­யை­விட இவ்­வாண்­டுக்­கான வாராந்­திர வேலை நேரம் குறைவு. பல துறை­களில் வேலை செய்­யும் முழு­நேர ஊழி­யர்­க­ளின் வேலை நேரம் குறைந்­தி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­யால் வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டுள்ள துறை­களில் வேலை நேரம் அதி­கம் குறைந்­துள்­ளது.

போக்­கு­வ­ரத்து, உணவு, பான சேவை­கள், ஹோட்­டல்­கள், சில்­லறை வர்த்­த­கங்­கள் ஆகிய துறை­களில் பணி­பு­ரி­யும் ஊழி­யர்­க­ளின் வேலை நேரம் வெகு­வா­கக் குறைந்­த­தாக அமைச்சு கூறி­யது.

"குறைந்­துள்ள வேலை நேரம், உண­வகங்­களில் உண­வ­ருந்­து­தல், பய­ணங்­கள் ஆகி­ய­வற்­றில் தொட­ரும் கட்­டுப்­பா­டு­களை பிர­தி­ப­லிக்­கிறது. வேலை அளவு பாதிக்­கப்­பட்­டி­ருப்­பதை இது காட்­டு­கிறது," என்று அமைச்சு கூறி­யது.

இதற்கு மாறாக, கடந்த ஓராண்­டா­கப் பெரும்­பா­லான துறை­களில் பகு­தி­நே­ர­மா­கப் பணி­பு­ரி­யும் ஊழி­யர்­க­ளின் வேலை நேரம் அதி­க­ரித்­துள்­ளது.

இவ்­வாண்டு வாராந்­திர அடிப்­ப­டை­யில் பகு­தி­நேர ஊழி­யர்­கள் சரா­ச­ரி­யாக 21.5 மணி நேரம் வேலை செய்­த­னர். கடந்த ஆண்டு பதி­வான 21.2 மணி நேரத்­தை­விட இது அதி­கம்.

துப்­பு­ர­வுப் பணி­யா­ளர்­கள், தொழி­லா­ளர்­கள் ஆகி­யோ­ரின் வேலை நேரம் அதி­க­ரித்­துள்­ளது. ஆனால் நிபு­ணத்­துவ, மேலா­ளர், நிர்­வா­கி­கள், தொழில்­நுட்­பர் பிரி­வு ­க­ளைச் சேர்ந்த வேலை­களில் ஊழி­யர்­க­ளுக்­கான சரா­சரி வாராந்­திர வேலை நேரம் குறைந்­துள்­ளது.

"கொவிட்-19 சூழல் கார­ண­மாக வர்த்­தக, தொழில்­துறை கட்­ட­டங்­களில் துப்­பு­ர­வுப் பணி­யா­ளர்­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­தி­ருப்­பதை இந்­தப் புள்­ளி­வி­வ­ரங்­கள் காட்­டு­கின்றன. சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை­யின் உற்பத்திப் பிரிவு ஊழியர்களின் வேலை நேரம் அதி­

க­ரித்­துள்­ளது," என்று மனி­த­வள அமைச்சு தெரி­வித்­தது.