வசதிகளுடன் அந்திமகால பராமரிப்பு நிலையம்

வசதிகளுடன் அந்திமகால பராமரிப்பு நிலையம்

2 mins read
a78eeaed-78df-47f3-a762-cf7ac1b35722
-

வாழ்க்­கை­யின் இறு­திக்­கட்­டத்தை எட்­டும் நாட்­பட்ட நோயா­ளி­களை அவர்­க­ளது இறு­திக்­கா­லத்தை மகிழ்ச்­சி­யு­டன் களிக்­கும் வகை­யில், அவர்­க­ளுக்­கான ஊட்­ரம் சமூக மருத்­து­வ­ம­னை­யின் அந்­தி­ம­கால பகல்­நேர பரா­ம­ரிப்பு நிலை­யத்­தில் ஆரோக்­கிய நீரூற்­றுக் குளி­யல் வசதி, மாஜோங், செஸ் போன்ற அட்­டைப்­ப­ல­கை­க­ளைக் கொண்ட விளை­யாட்­டு­க­ளுக்­கான அறை, மதுக்­கூ­டம் போன்ற வச­தி­க­ளு­டன் வாரந்­தோ­றும் மகிழ்ச்சி நேர நிகழ்­வு­களும் இடம்­பெ­றும்.

ஓயெசிஸ்@ஊட்­ர­மில் புதி­தாக தொடங்­கப்­பட்­டுள்ள பகல்­நேர அந்­தி­ம­கால பரா­ம­ரிப்பு நிலை­யம் திரை­ய­ரங்கு உள்­ளிட்ட பல வச­தி­க­ளு­டன் அழ­குற மெரு­கூட்­டப்­பட்­டுள்­ளது. வச­தி­யா­கச் சாய்ந்­து­கொண்டு படம் பார்க்­கும் வகை­யில் மென்­மை­யான இருக்கை வச­தி­களும் செய்­யப்­பட்­டுள்­ளன.

இரண்டு கூடைப்­பந்­துத் திடல்­களின் அள­வைக் கொண்ட ஏறத்­தாழ 900 சதுர மீட்­டர் பரப்­ப­ள­வைக் கொண்­டது இந்த அந்­தி­ம­கால பரா­ம­ரிப்பு நிலை­யம். இந்த நிலை­யத்­தில் இறு­திக்­கா­லத்­தைக் கழிக்­கும் நோயா­ளி­க­ளுக்கு மகிழ்ச்­சி­யான நல்ல அனு­ப­வத்­தைத் தரும் வகை­யி­லான இந்த ஏற்­பாட்­டுக்கு ஹெச்.சி.ஏ. அந்­தி­ம­கால பரா­ம­ரிப்பு மற்­றும் வள்­ளல் லியன் அற­நி­று­வ­னம் ஆகி­யவை இணைந்து $2.47 மில்­லி­யன் தொகையை அளித்­துள்­ளன.

சிராங்­கூன், மார்­சி­லிங் ஆகிய இடங்­களில் தொடங்­கப்­பட்­டுள்ள வச­தி­க­ளு­டன் கூடிய அந்­தி­ம­கால பரா­ம­ரிப்பு இல்­லத்­தைத் தொடர்ந்து மூன்­றா­வதாக இந்த நிலை­யம் அமை­யும். அனைத்து வச­தி­க­ளை­யும் உள்­ள­டக்­கிய இந்த பரா­ம­ரிப்பு நிலை­யம் 2022, ஜன­வ­ரி­யில் அதி­கா­ர­பூர்வ திறப்பு விழா காணும்.

இந்­தப் புதிய நிலை­யம் மற்ற நிலை­யங்­க­ளைப் போல் அல்­லாது, அதா­வது நோயா­ளி­கள் முன்­கூட்­டியே வரை­ய­றுக்­கப்­பட்ட நிகழ்ச்­சி­களைப் பின்­பற்­றத் தேவை­யில்லை. அவர்­க­ளுக்கு எப்­போது எந்த நட­வ­டிக்­கை­யில் பங்­கு­கொள்ள வேண்­டுமோ அதைத் தேர்வு செய்­து­கொள்­ள­லாம்.

மொத்­தம் 45 பெரி­ய­வர்­களும் மூன்று குழந்­தைப் பருவ நோயா­ளி­க­ளை­யும் கொள்­ளும் இந்த நிலை­யம் தற்­போ­தைய தொற்­றுச்­சூ­ழ­லில் 32 பேர் மட்­டுமே அனு­ம­திக்­கப்­படு­வர்.

2022 ஜன­வரி முதல் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இந்த நிலை­யம் இயங்­கும்.