பாலியல் உறவுக்காக 11 பெண்களை ஏமாற்றியவரின் தண்டனை மேல்முறையீட்டுக்குப்பின் மேலும் அதிகரிப்பு

பாலியல் உறவுக்காக 11 பெண்களை ஏமாற்றியவரின் தண்டனை மேல்முறையீட்டுக்குப்பின் மேலும் அதிகரிப்பு

1 mins read
82c262ad-aec1-40f5-9a4f-1a51e0229588
அந்­தப் பெண்­க­ளுக்­குச் செல்­வந்­தர்­க­ளி­டம் தொடர்பு ஏற்­ப­டுத்­து­வ­தற்குமுன் தம்­மி­டம் பாலியல் உறவு கொள்ள வேண்­டும் என்று டி பீர்ஸ் வோங் டியான் ஜுன் கூறியிருந்தார். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உட­லு­ற­வு­கொள்ள 11 பெண்­களை ஏமாற்­றிய ஆட­வர் ஒரு­வ­ருக்கு நீதி­மன்­றம் மூன்­றரை ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை விதித்­தி­ருந்­தது.

அந்­தச் சிறைத் தண்­ட­னை­யைக் குறைக்­கு­மாறு மேல் முறை­யீடு செய்திருந்தார். அந்த வழக்கை விசா­ரித்த நீதி­மன்­றம், குற்­றத்­தின் கடு­மையை கவ­னத்­தில் கொண்டு ஏற்­கெ­னவே வழங்­கப்­பட்ட தண்­ட­னையை இரட்­டிப்புக்கும் அதிகமாக்கி 8 ஆண்­டு­கள், 4 நான்கு மாதச் சிறைத் தண்­டனை எனத் தீர்ப்­ப­ளித்­தது.

டி பீர்ஸ் வோங் டியான் ஜுன் என்ற 40 வயது ஆட­வர், வய­தான செல்­வந்­தர்­களை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தா­க­வும் தம்மை ஒரு முக­வர் என்­றும் கூறிக்­கொண்டு 18 முதல் 24 வய­து­டைய பெண்­களை ஏமாற்­றி­யுள்­ளார்.

அத்­து­டன், அந்­தப் பெண்­க­ளுக்­குச் செல்­வந்­தர்­க­ளி­டம் தொடர்பு ஏற்­ப­டுத்­து­வ­தற்குமுன் தம்­மி­டம் பாலியல் உறவு கொள்ள வேண்­டும். அப்­போ­து­தான் உங்­களை பரிந்­துரை செய்­ய­லாமா வேண்­டாமா என்று என்­னால் கணிக்க முடி­யும் என்று கூறி அவர்­களை ஏமாற்­றி­யுள்­ளார். குறை­வான தண்­டனை பெறும் நோக்­கத்­தில் நீதி­மன்­றத்­தில் வோங் அளித்த உள­நோய் குறித்த அறிக்­கையை நீதி­மன்­றம் நிரா­க­ரித்­தது.

பத்து மாதங்­க­ளாக இவர் நேர்த்­தி­யான முறை­யில் லோகோண்டோ என்­னும் இணை­யத்தளத்­தில் 'வய­தான செல்­வந்­தர்­க­ளின் துணைக்­குப் பெண்­கள் தேவை' என்று விளம்­ப­ரம் கொடுத்­தி­ருந்­தார். 2015 ஏப்­ரல் மாதத்­திற்­கும் 2016 ஜன­வரி மாதத்­திற்கு இடைப்­பட்ட காலக்­கட்­டத்­தில் குறைந்­த­பட்­சம் 11 பெண்­கள் இவ­ரது விளம்­ப­ரத்­திற்­குப் பதி­ல­ளித்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

உங்­க­ளின் சேவைக்­காக அவர்­கள் S$8,000 முதல் $20,000 வரை கொடுப்­பார்­கள் என்று அந்­தப் பெண்­க­ளி­டம் ஆசை­வார்த்தை பேசி வோங் ஏமாற்­றி­யுள்­ளார்.