சிங்கப்பூரர் மீது கம்போடியாவில் குற்றச்சாட்டு

சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த 68 வயது முதி­ய­வர் ஒரு­வர் கம்­போ­டி­யா­வில் கைது­செய்­யப்­பட்டு, போதைப்­பொருள் கடத்­தி­ய­தாக நீதி­மன்­றத்­தில் குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது.

கம்­போ­டியா காவல் துறை, மேற்­கொண்ட அதி­ர­டிச் சோத­னை­யில் கோ சியோ சியான் என்ற அந்த சிங்­கப்­பூ­ர­ரும், வியட்­னா­மைச் சேர்ந்த 27 வயது லி ஜியாங் ஃபோங், கம்­போ­டி­யா­வைச் சேர்ந்த 60 வயது டெய்ங் லீக் ஆகி­யோ­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர்.

சாம்­கர் மோன், டுவோல் கொளக் ஆகிய மாவட்­டங்­களில் நடந்த இந்­தச் சோத­னை­யின்­போது எக்ஸ்­டசி, மெத்­தம்­ஃபெ­ட­மின், கெட்­ட­மின் உள்­ளிட்ட 24 கிலோ போதைப் பொருளை போலி­சார் கைப்­பற்­றி­னர்.

கைது­செய்­யப்­பட்ட மூவர் மீதும் போதைப்­பொ­ருள் உற்­பத்தி செய்­தது, கடத்­தி­யது, வைத்­தி­ருந்­தது போன்ற குற்­றச்­சாட்­டு­கள் நேற்று முன்­தி­னம் நீதி­மன்­றத்­தில் சுமத்­தப்­பட்­டன.

அவர்­கள் மீதான குற்­றச்­சாட்­டு­கள் நிரூ­பிக்­கப்­பட்­டால் கம்­போ­டிய சட்­டத்­தின்­படி ஒவ்­வொ­ருவருக்­கும் ஆயுள் தண்­டனை விதிக்­கப்­படும்.

கைது­செய்­யப்­பட்ட கோ சியோ சியா­னின் வர்த்­த­கத் தர­வு­களில் அவர் சிங்­கப்­பூ­ரின் செங்­காங் வட்­டா­ரத்­தைச் சேர்ந்­த­வர் என்று கூறப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!