அதிக அபாயமுள்ளோருக்குக் கூடுதல் தடுப்பூசி போடப்படும்

அதிக அபாயமுள்ளோருக்குக் கூடுதல் தடுப்பூசி போடப்படும்

1 mins read
399deec6-ee32-4402-b2df-0ee5d6799920
-

கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட அதிக அபா­யம் இருப்­ப­தாக மதிப்­பி­டப்­படும் தற்­காப்பு அமைச்சு மற்­றும் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யின் அத்­தி­யா­வ­சி­யப் பணி­யாளர்­க­ளுக்­குக் கூடு­தல் (பூஸ்­டர்) தடுப்­பூ­சித் திட்­டம் நீட்­டிக்­கப்­பட்­டு உள்­ளது.

செயல் பிரி­வு­கள், செயல்­பயிற்சி பெறும் பிரி­வு­கள், பயிற்சி அதி­கா­ரிப் பள்ளி, நிபு­ணத்­து­வப் பயிற்சி அதி­கா­ரிப் பள்ளி உள்­ளிட்­ட­வற்­றைச் சேர்ந்த 30 வய­திற்­குட்­பட்­டோ­ருக்­குக் கூடு­தல் தடுப்­பூசி வழங்­கப்­படும்.

சமூக அள­வில் இப்­போ­தைய கொவிட்-19 பர­வல் போக்­கின் அடிப்­ப­டை­யில் இடர் மதிப்­பீடு மேற்­கொள்­ளப்­பட்டு இருப்­ப­தாக அமைச்­சின் அறிக்கை குறிப்­பிட்­டது.

முன்­ன­தாக, இரண்­டா­வது கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு ஆறு மாதங்­க­ளாகி இருந்தால், 30 வய­தும் அதற்­கும் மேற்­பட்ட சேவை­யா­ளர்­க­ளுக்­கும் 30 வய­திற்­குக் கீழுள்­ள­வர்­களில் தொற்று அபா­யம் அதி­க­மாக இருப்­போ­ருக்­கும் கூடு­தல் தடுப்­பூசி வழங்­கப்­பட்டு வந்­தது.