'விடுமுறைப் பயணத் திட்ட மாற்றத்துக்குத் தயாராக இருக்கவும்'

'விடுமுறைப் பயணத் திட்ட மாற்றத்துக்குத் தயாராக இருக்கவும்'

1 mins read
ca636ab4-9b83-47d7-ae55-7ea8b1919bb9
-

உல­க­ளா­விய நிலை­யில் ஓமிக்­ரான் கொவிட்-19 கிருமி வகை பரவி வரு­வ­தால் விடு­மு­றைப் பய­ணத் திட்ட மாற்­றத்­துக்­குத் தயா­ராக இருக்க வேண்­டும் என்று உள்­ளூர் பய­ணத்துறை நிபு­ணர்­கள் சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டம் தெரி­வித்­துள்­ள­னர்.

நிலைமை மிக வேக­மாக மாறக்­கூ­டும் என்று அவர்­கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­னர்.

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட வெளி­நாட்­டுப் பய­ணி­க­ளுக்­கான தனி­மைப்­ப­டுத்த தேவை­யில்­லாப் பய­ணத் திட்­டத்தை இரண்டு வாரங்­க­ளுக்­குத் தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­வைப்­ப­தாக தென்­கொ­ரியா நேற்று முன்­தி­னம் அறி­வித்­தது.

இத்­த­கைய திடீர் மாற்­றங்­கள் சிங்­கப்­பூர் பய­ணி­க­ளைப் பதற்­றம் அடை­யச் செய்­தி­ருப்­ப­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழி­டம் இரண்டு சுற்­றுப்­ப­யண முக­வை­கள் தெரி­வித்­தன.

தென்­கொ­ரி­யா­வின் அறி­விப்பு சிங்­கப்­பூ­லி­ருந்து தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வோ­ருக்­கான பய­ணத் திட்­டத்­தின்­கீழ் பய­ணம் செய்­வோ­ரை­யும் பாதிக்­குமா என்­பதை கண்டுபி­டிக்க முக­வை­கள் விரை­கின்­றன.

ஐரோப்­பிய நாடு­க­ளுக்குப் பய­ணம் மேற்­கொள்­ளத் திட்­ட­மிட்­டுள்ள சிங்­கப்­பூ­ரர்­களும் கவ­லை­யில் ஆழ்ந்­தி­ருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. நிலை­மையை உன்­னிப்­பா­கக் கண்­கா­ணித்து வரு­வ­தாக முக­வை­கள் அவர்­க­ளுக்கு உறுதி அளித்­துள்­ளன.

தென்­கொ­ரி­யா­வின் அறி­விப்­பால் சிங்­கப்­பூர் பய­ணி­கள் பாதிக்­கப்­பட்­டால் அவர்­கள் தங்­கள் பய­ணத்தை ஒத்­தி­வைக்­க­லாம். அல்­லது பய­ணம் செய்ய அனு­மதி வழங்­கப்­பட்­டுள்ள வேறு நாடு­

க­ளுக்­குச் செல்­லாம். அதை விரும்­பா­த­வர்­கள் செலுத்­திய முழுத் தொகை­யை­யும் திரும்பப் பெற்­றுக்­கொள்­ள­லாம் என்று சான்

பிர­தர்ஸ் நிறு­வ­னம் கூறி­யது.