வட்டமேசை அரும்பொருளகத்தின் வெள்ளி விழாவைக் கொண்டாடும் வகையில் சிறப்புக் கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1996ஆம் ஆண்டில் தேசிய மரபுடைமைக் கழகத்தால் அமைக்கப்பட்ட பல்வேறு அரும்பொருளகங்களே இந்த வட்டமேசை அரும்பொருளகம்.
வட்டமேசையைச் சேர்ந்த 62 பொது, தனியார் அரும்பொருளகங்கள், காட்சிக்கூடங்கள், மரபுடைமை நிலையங்கள் ஆகியவை உள்ளன. அவற்றில் 26 அரும்பொருளகங்கள், காட்சிக்கூடங்கள், மரபுடைமை நிலையங்கள் ஆகியவற்றுடன் இணைந்து தேசிய மரபுடைமைக் கழகம் இந்த வெள்ளி விழாவை நடத்துகிறது.
சிறப்புக் காட்சிக்கூடம் ராஃபிள்ஸ் சிட்டி கடைத்தொகுதி யில் நேற்று தொடங்கியது. இம்மாதம் 15ஆம் தேதி வரை அங்கு கண்காட்சி நடைபெறும். அதனைத் தொடர்ந்து, மற்ற இடங்களில் இந்த நகரும் காட்சிக்
கூடம் அமைக்கப்படும். "ஒவ்வோர் இடத்திலும் வைக்கப்படும் இந்தக் காட்சிக்கூடம் எங்கள் அரும்
பொருளகங்கள், காட்சிக்கூடங்
களின் செழுமையைக் காட்டுகிறது. சிங்கப்பூரில் துடிப்புமிக்க அரும்பொருளக, மரபுடைமைக் கலாசாரத்தை உருவாக்கியதில் வட்டமேசை அரும்பொருளகத்தின் பங்களிப்பு அதிகம். அதன்படி அதைக் கௌரவிக்கும் வகையில் இந்த வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது. கண்காட்சியில் பங்கு கொள்ளும் அரும்பொருளகங்களிடமிருந்து சிறப்புத் தள்ளுபடி கூப்பன்களையும் பரிசுப் பொருள்களையும் பொதுமக்கள் எதிர்பார்க்கலாம்.

