பிணையில் விடுவிக்கப்பட்ட சமயத்திலும் குற்றச்செயலில் ஈடுபட்ட இளையர்; ஐடிஇ மாணவரைக் கத்தியால் தாக்கினார்

பிணையில் விடுவிக்கப்பட்ட சமயத்திலும் குற்றச்செயலில் ஈடுபட்ட இளையர்; ஐடிஇ மாணவரைக் கத்தியால் தாக்கினார்

2 mins read
977802bb-fbfe-4871-b0f5-dd828a147b64
-

மோச­டிக் குற்­றத்தை எதிர்­நோக்­கிய தொழில்நுட்பக் கல்விக் கழக (ஐடிஇ) கிழக்கு கல்லூரியின் முன்­னாள் மாண­வர் ஒரு­வர் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்த சம­யத்­தி­லும் மற்­றொரு குற்­றச்­செ­ய­லில் ஈடு­பட்டு உள்ளார். சக மாண­வர் ஒரு­வரை அவர் கத்­தி­யால் வெட்டிக் காயப்­ ப­டுத்­தி­யுள்­ளார்.

ேநற்று நடந்த வழக்கு விசா­ர­ணை­யில் தற்­போது 19 வய­தா­கும் பழ­னி­தாஸ் ராம­தாஸ், கத்­தி­யால் காயம் ஏற்­ப­டுத்­தி­யது, உரி­மம் இல்­லா­மல் கார் ஒட்­டி­யது உட்­பட தம் மீது சுமத்­தப்­பட்ட எட்டுக் குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக் கொண்­டார்.

பழ­னி­தாஸ் தாக்­கு­வ­தற்கு உடந்­தை­யாக இருந்த மற்­றொரு 18 வயது மாண­வர் ஒரு­வர், ரொட்டி வெட்­டும் கத்­தி­யைக் கொடுத்து உத­வி­ இ­ருக்­கி­றார்.

இரு பதின்ம வய­தி­ன­ரும் தற்­போது ஐடி­இ­யில் படிக்­க­வில்லை எனத் தெரி­கிறது.

கொள்ளை முயற்­சி­யில் ஈடு­பட்­ட­தை­யும் பழ­னி­தாஸ் கத்­தி­யால் தாக்கு­வ­தற்கு உடந்­தை­யாக இருந்­தை­யும் 18 வயது இளை­யர் 2019 அக்­டோ­பர் மாதம் நடை­பெற்ற விசா­ர­ணை­யில் ஒப்­புக்கொண்­டார்.

அவ­ருக்கு 27 மாத நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்புத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

அவர் கொள்­ளைச் சம்­ப­வத்­தில் ஈடு­பட்­ட­போது 17 வய­தாக இருந்­த­தால் அவ­ரது பெயரைச் சட்­டப்­படி வெளி­யிட முடி­யாது.

கடந்த ஆண்டு டிசம்­ப­ரி­லி­ருந்து பழ­னி­தாஸ் பல்­வேறு குற்­றச்­செ­யல்­களில் ஈடு­ப­டத் தொடங்­கி­னார். பதின்ம வயது பெண் ஒரு­வ­ரின் கைபே­சி­யில் இருந்த 31 வயது நப­ரின் ஓட்­டு­நர் உரி­மம், அடை­யாள அட்டை படங்­களை அவ­ருக்­குத் தெரி­யா­மல் தன்­னு­டைய கைபே­சிக்கு அனுப்பி வைத்­துக் கொண்­டார்.

பின்­னர் அந்த ஒட்­டு­நர் உரி­மத்­தைப் பயன்­ப­டுத்தி 'ஷேரி­யட்' கார் பகிர்வு நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து வாட­கைக்கு கார் எடுத்து பழ­னி­தாஸ் ஓட்­டி­னார். பழ­னி­தாஸிடம் ஓட்­டு­நர் உரி­மம் இல்லை.

இவ்­வாண்டு பிப்­ர­வரி 15ஆம் தேதி பிணை­யில் விடு­விக்­கப்­பட்­ட­போது சக மாண­வர் ஒரு­வர் பிரச்­சி­னை கொடுப்­ப­தா­கக் கூறி மற்­றொரு இளை­யரை அவர் கத்தி எடுத்து வரச் சொல்­லி­யி­ருக்­கி­றார்.

பழ­னி­தா­சும் அவ­ரது நண்­ப­ரும் உண­வ­கத்­தில் சக மாண­வ­ரைச் சந்­தித்து வம்­புக்கு இழுத்­துள்­ள­னர்.

பின்­னர் அந்த மாண­வரை கார்­பேட்­டைக்கு வரு­மாறு அவர்­கள் உத்­த­ர­விட்­ட­னர்.

மாண­வர் அங்கு வந்­த­தும் பழனி­ தாஸ் அவரைக் கத்­தி­யால் தாக்­கி­னார். தப்­பி­யோ­டிய மாண­வர் தனது தந்­தைக்­குத் தக­வல் கொடுக்க, காவல்­து­றைக்கு தெரி­விக்­கப்­பட்­டது.

மாண­வ­ருக்கு இடது தோளி­லும் காதி­லும் காயம் ஏற்­பட்­டது. சாங்கி பொது மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்ற மாண­வர் நான்கு நாள் மருத்­துவ விடுப்­பில் இருக்க நேரிட்­டது.

அதன் பிறகு கத்­தியைத் தூக்கி­வீ­சி­விட்டு பள்­ளி­யி­லி­ருந்து பழ­னி­தாஸ் வெளி­யே­றி­னார். பிப்­ர­வரி 17ல் அவரைக் காவல்­து­றை­யி­னர் கைது செய்­த­னர்.

நேற்று விசா­ர­ணை­யின்­போது நீதி­பதி எஸ். ஜெனி­ஃபர் மேரி, நன்­ன­டத்­தைக் கண்­கா­ணிப்பு மற்­றும் மறு­வாழ்வுப் பயிற்­சிக்கு இளை­யர் ஏற்­ற­வரா என்­பதை மதிப்­பி­டும்­படி உத்­த­ர­விட்­டார். இதை­ய­டுத்து வழக்கு ஒத்தி வைக்­கப்­பட்­டது.

வரும் ஜன­வரி 11ஆம் தேதி வழக்கு மீண்­டும் விசா­ர­ணைக்கு வரும்­போது அவ­ருக்கு தண்­டனை விதிக்­கப்­படலாம் எனத் தெரி­கிறது.