நூலக அதிகாரிகளுக்கு உதவும் எந்திரன்

1 mins read
c3a90b47-966e-46f1-b841-fcff7d86ce8d
-

நூலக அதி­கா­ரி­க­ளின் சுமை­யைக் குறைக்க உத­வு­கிறது இந்த புதிய வகை இயந்­திர மனி­தன். சிங்­கப்­பூ­ரின் பொது நூல­கங்­களில் புத்­த­கங்­களை ஸ்கேன் செய்­ய­வும் அல­மா­ரி­களில் அடுக்­க­வும் ரோபோக்­கள் சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அந்த வகை­யில் 'ஆரோரோ' என்ற இந்த ரோபோவை நூலக அதி­கா­ரி­களால் செயல்­ப­டுத்தமுடி­யும்.

நீண்டு சுருங்­கும் 'கைக­ளால்' அல­மா­ரி­க­ளுக்கு வெளியே நீட்டிக்­கொண்­டி­ருக்­கும் புத்­த­கங்­களை இந்த ரோபோ உள்ளே தள்ளி சீராக அடுக்­கும்.

புத்­த­கங்­களை இருந்த இடத்­தி­லி­ருந்தே துல்­லி­ய­மாக ஸ்கேன் செய்­வ­தில் வல்­லது.

அண்­மைக் கால­மாக உல­கின் பல நாடு­களில் செயற்கை நுண்­ண­றிவு அம்­சங்­க­ளைக் கொண்டு அன்­றாட வாழ்க்­கை­யில் தீர்­வு­கள் வழங்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன. இதன் தொடர்­பில் சிங்­கப்­பூ­ரி­லும் பல முயற்­சி­கள் எடுக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன. அந்த வரிசையில் இந்த ரோபோவும் அசத்தவந்துள்ளது.

படம்: சென்­ஸர்­போட்