ஏமஸ் யீக்கு ஆறு ஆண்டு சிறை

ஏமஸ் யீக்கு ஆறு ஆண்டு சிறை

2 mins read
bb8309c1-b1f3-4bec-928a-68e99e355984
ஆறு ஆண்டு சிறைத்­தண்­டனை பெற்ற ஏமஸ் யீ. படம்: குக் கவுண்டி ஷெரிஃப் அலுவலகம் -

குழந்தை ஆபாசப் படங்கள், பாலியல் செயல்களுக்காக அதன் நம்பிக்கையைப் பெறுதல்

சிங்­கப்­பூ­ரின் வலைப்­ப­தி­வா­ளர் ஏமஸ் யீ, சிறு­வர் ஆபா­சப் படங்­கள் மற்­றும் பாலி­யல் செயல்­க­ளுக்­காக அவர்­க­ளின் நம்­பிக்­கை­யைப் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டது ஆகிய இரண்டு குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொண்­டதை அடுத்து, நேற்று முன்­தி­னம் அமெ­ரிக்க நீதி­மன்­றம் அவ­ருக்கு ஆறு ஆண்டு சிறைத்­தண்­டனை விதித்­தது.

23 வய­தான யீ, சிறை­யில் இருந்து விடு­விக்­கப்­பட்ட பின்­னர், இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன் 14 வய­தாக இருந்த அந்­த பாதிக்­கப்­பட்­ட­வரை தொடர்பு கொள்­ளக்­கூ­டாது என்று சிகாகோ நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது.

மேலும் 16 சிறு­வர் ஆபா­சப் படங்­கள் தொடர்­பான குற்­றச்­சாட்­டு­களை யீ எதிர்­கொண்­டார். அதை அவர் ஒப்புக்கொள்ள சம்மதித்த குற்றச்சாட்டுகளின் பேரில் தள்ளு படி செய்யப்பட்டன.

குழந்தை ஆபா­சப் படங்­கள் பற்­றிய முதல் குற்­றச்­சாட்­டின்­படி, பிப்­ர­வரி மற்­றும் ஜூலை 2019க்கு இடை­யில், வீடியோ மற்­றும் பிற ஊட­கங்­களில் தோன்றி, ஆபா­ச­மான முறை­யில் காட்சி கொடுக்­கு­மாறு, பாதிக்­கப்­பட்­ட­வரை யீ கோரி­னார், வற்­பு­றுத்­தி­னார், தூண்­டி­னார் என்­றும் அவ­ரது குற்­றச்­சாட்­டில் கூறப்­பட்­டது.

இல்­லி­னாய் குற்­ற­வி­யல் சட்­டத்­தின் கீழ் இக்­குற்­றங்­க­ளுக்கு குறைந்­த­பட்­சம் நான்கு ஆண்டு முதல் 15 ஆண்டு வரை சிறைத்­தண்­டனை விதிக்­கப்­ப­ட­லாம்.

வீடியோ இணைப்பு மூலம் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லை­யான யீயி­டம், அவர் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டால், அவர் நாடு­க­டத்­தப்­ப­ட­லாம், அமெ­ரிக்­கா­வில் தங்கி யிருக்க அனு­மதி மறுக்­கப்­ப­ட­லாம் அல்­லது எதிர்­கா­லத்­தில் அவருக்கு அமெ­ரிக்க குடி­யு­ரிமை மறுக்­கப்­ப­ட­லாம் என்று நீதி­பதி கேரல் ஹாவர்ட் அறி­வு­றுத்­தி­னார்.

இந்த தண்­ட­னை­கள் குடி­யி­ருப்பு, வேலை­வாய்ப்பு, ஓட்­டு­நர் உரி­மம் உள்­ளிட்ட பிற உரி­மங்­க­ளைப் பெறு­வ­தற்­கான அவ­ரது வாய்ப்­பை­யும் பாதிக்­க­லாம் என்று அவர் மேலும் கூறி­னார்.

நீதி­பதி சொன்­னதை தாம் புரிந்து­கொண்­ட­தாக யீ பதி­ல­ளித்­தார். விசா­ர­ணை­யின் பெரும்­ப­கு­தியை ஆம் அல்­லது இல்லை என்று பதி­ல­ளித்த யீ, தண்­ட­னையை விதிக்­கும் முன் ஏதா­வது சொல்ல வேண்­டுமா என்று நீதி­பதி கேட்­ட­போது பேச மறுத்­து­விட்­டார்.

யீ அவ­ரது 20 வய­து­க­ளின்­போது குற்­றங்­க­ளைப் புரிந்­தார். அப்­போது அவர் சிகா­கோ­வின் குக் கவுண்­டி­யில் வசித்து வந்­தார்.

பிப்­ர­வரி 2019ல் இணைய உரை­யா­டல் தளம் வழி யீ பாதிக்­கப்­பட்­ட­வ­ரின் நட்­பைப் பெற்­றார் என்று உதவி அரசு வழக்­க­றி­ஞர் மார்­செல் டெய்­லர் கூறி­னார்.

பாதிக்­கப்­பட்ட பெண்ணை தனது உடற்பகுதிகளை நிர்வாண மாகக் காட்­டு­மாறு யீ பல­முறை கேட்­டுக் கொண்­ட­தாக அவர் கூறி­னார். குற்­றம் நடந்­த­போது பாதிக்­கப்­பட்ட அந்­தப் பெண் தனக்கு 14 வயது என்று யீயி­டம் கூறி­ய­தாக ஆதா­ரங்­கள் காட்­டு­வ­தாக திரு டெய்­லர் கூறி­னார்.

யீ தனது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம், ஆனால் 30 நாட்களுக்குள் அவர் தனது குற்றத்தை திரும்பப் பெறுவதற்கு முன் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.

அவர் இதற்கு முன்பு 2015ஆம் ஆண்டில் ஒரு சமயக் குழுவை துன்புறுத்துதல் மற்றும் அவமதித்த தற்காக சிங்கப்பூரில் இரண்டு முறை ஏமஸ் யீ சிறையில் அடைக்கப் பட்டார்.

2016ஆம் ஆண்டு அமெரிக்கா வந்த அவருக்கு 2017ஆம் ஆண்டு புகலிடம் கிடைத்தது.