ஒரே இடத்தில் பல்வேறு வசதிகள்; 200,000 பேருக்குச் சேவையாற்றும் பொங்கோலில் ஒருங்கிணைந்த சமூக மையம் 2022ல் தயார்

'ஒன் பொங்­கோல்' என்ற ஒருங்­கிணைந்த சமூக மையம் அடுத்த ஆண்டு நடுப்­ப­கு­தி­யில் இருந்து கட்­டம் கட்­ட­மா­கத் திறக்­கப்­படும்.

அந்த மையத்­தில் நூல­கம், 700 இடங்­க­ளைக் கொண்ட உண­வங்­காடி நிலை­யம், குழந்­தைப் பரா­மரிப்பு நிலை­யம், மூத்த குடி­மக்­கள் நிலை­யம் வரை பல வச­தி­களும் இருக்­கும்.

கிட்­ட­தட்ட 200,000 குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு அந்த மையம் சேவை­யாற்­றும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. 2.8 ஹெக்­டர் நிலப்­ப­ரப்­பில் உரு­வா­கும் ஐந்து மாடி கட்­ட­டத்­தில் அது அமை­யும்.

அந்­தக் கட்­ட­டம் பொங்­கோல் எம்­ஆர்டி நிலை­யம், பொங்­கோல் நக­ர சதுக்­கம், வாட்­டர்வே பாயிண்ட் கடைத்­தொ­குதி, பொங்­கோல் வட்­டார்வே பூங்கா, குடியிருப்­புப் புளோக்­கு­கள் ஆகி­ய­வற்­று­டன் நடை­பாதை மூலம் தொடர்பு கொண்டு இருக்­கும்.

'அவர் தெம்­ப­னிஸ் ஹப்', 'பிடோக் ஹார்ட்­பீட்' ஆகிய இதர இரண்டு ஒருங்­கி­ணைந்த சமூக மையங்களைத் தொடர்ந்து இந்­தப் புதிய மையம் அமை­கிறது.

சுகா­தார, தொடர்பு தக­வல் மூத்த துணை அமைச்­சர் டாக்­டர் ஜனில் புதுச்­சேரி நேற்று நடந்த கட்­டு­மான நிறைவு நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­டார். கொரோனா தொற்று கார­ண­மாக கட்­டு­மா­னம் தடைப்­பட்­டா­லும்­கூட புதிய மையம் கட்­டம் கட்­ட­மாகக் குறித்த நேரத்­தில் திறக்­கப்­படும் என்­று அவர் கூறினார். ஏறத்­தாழ 80 விழுக்­காடு கட்­டு­மானப் பணி­கள் நிறை­வ­டைந்­துள்­ளன.

மக்­கள் கழ­கம், வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம், சுகா­தார அமைச்சு உள்­ளிட்ட பல அமைப்­பு­ களும் அந்த மையத்­தில் ஒரே கூரை­யின்­கீழ் பல வச­தி­க­ளை­யும் சேவை­க­ளை­யும் வழங்­கும்.

ஐந்­தா­வது மாடி­யில் பல்நோக்கு மண்­ட­பம் இருக்­கும்.

அதில் நான்கு பூப்­பந்து விளை­யாட்­டுக் கூடங்­கள், 600 பேர் அமர்ந்து நிகழ்ச்­சி­க­ளைப் பார்ப்­பதற்­கான வச­தி­கள், இசைக் கூடங்­கள் சமூ­கத் தோட்­ட­ம் இருக்கும்.

பொங்­கோல் வட்­டார நூல­கம் ஐந்து மாடி­க­ளி­லும் அமைந்து இருக்­கும். அங்கு உடற்­கு­றை­யோர் உள்­ளிட்ட அனைத்து தரப்பு மக்­க­ளுக்­கும் பயன்­படும் சிறப்பு தொகுப்­பு­கள் இருக்­கும்.

குழந்­தைப் பரா­ம­ரிப்பு நிலை­யம் அடுத்த ஆண்டு 500 பாலர்­பள்ளி குழந்­தை­க­ளுக்கு இட­ம­ளிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மூத்­தோர் பரா­ம­ரிப்பு நிலை­யம் முழு­நேர செயல்­திட்­டங்­களை அமல்­ப­டுத்­தும். புதிய மையத்தில் உணவு, பானக் கடை­க­ளுக்கும் குறை இருக்­காது.

200க்கும் மேற்­பட்ட அர­சாங்க அமைப்­பு­க­ளின் சேவை­களை அங்கு மக்கள் எளி­தாக எட்­ட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!