பொய் சொன்னது சொன்னபடியே இருக்கட்டும் என ரயீசா கானிடம் கூறிய கட்சிப் பிரமுகர்கள்

பொய் சொன்னது சொன்னபடியே இருக்கட்டும் என ரயீசா கானிடம் கூறிய கட்சிப் பிரமுகர்கள்

2 mins read
bca0cd3c-7c58-44a4-8f98-362ab8f196ff
பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங், செங்காங் குழுத்தொகுதி உறுப்பினர் ஹி டிங் ரு (இடது), கட்சியின் தலைவர் சில்வியா லிம் ஆகியோர் டிசம்பர் 2ல் செய்தியாளர்களைச் சந்தித்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பாட்­டா­ளிக் கட்­சி­யின் மூன்று மூத்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தங்­கள் கட்­சி­யின் சகா­வான ரயீசா கானி­டம் நாடா­ளு­மன்­றத்­தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி அவர் சொல்லிய பொய் சொன்­னது சொன்­ன­ப­டியே இருக்­கட்­டும் என்று கூறி­னார்­கள்.

பட்­டா­ளிக் கட்­சி­யின் தலை­மைச் செய­லா­ள­ரும் எதிர்த்­த­ரப்பு தலை­வரு­மான பிரித்­தம் சிங், பாட்­டாளிக் கட்­சித் தலை­வர் சில்­வியா லிம், துணைத் தலை­வர் ஃபைசல் மானாப் ஆகிய மூவ­ரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி நடந்த கூட்­டத்­தில் திரு­வாட்டி ரயீசா, தான் கூறிய பொய் தொடர்­பில் விளக்­கம் எதை­யும் அல்­லது உண்மை எதை­யும் தெரி­விக்க வேண்­டாம் என்று கூறி­ய­தாக திரு­வாட்டி ரயீசா கானும் கட்­சி­யின் இதர உறுப்­பி­னர்­களும் தெரி­வித்­த­னர்.

அந்­தக் கூட்­டத்­தைத் தொடர்ந்து அது பற்றி தனது செய­லா­ள­ருக்கு திரு­வாட்டி ரயீசா கான் ஒரு செய்தி அனுப்­பி­னார்.

"நான் பிரித்­தம், சில்­வியா, ஃபைசல் மூவ­ரை­யும் இப்­போது பார்த்­தேன். இப்­போது செய்ய வேண்­டி­யது சொன்­னது சொன்­ன­படியே இருக்­கட்­டும் என்­ப­து­தான் என அவர்­கள் ஒப்­புக்­கொண்­டுள்­ள­னர்," என திரு­வாட்டி ரயீசா அந்­தச் செய்­தி­யில் குறிப்­பிட்­டார்.

நாடா­ளு­மன்ற உரி­மைக் குழு மன்­றத்­தி­ல் டிசம்­பர் 3ஆம் தேதி சிறப்பு அறிக்­கை­யைத் தாக்­கல் செய்­தது. அதில் பல விவ­ரங்­கள் அடங்கி இருக்­கின்­றன. அந்த அறிக்கை நாடா­ளு­மன்ற இணையத் தளத்­தில் வெளி­யி­டப்­பட்­டது.

உரி­மைக் குழு­வின் இரு நாள் விசா­ரணை விவ­ரங்­களும் அதில் இடம்­பெற்று இருந்­தன.

திரு­வாட்டி ரயீசாவும் அவ­ரு­டைய செய­லா­ள­ரான லோ பெய் யிங்­கும் வியா­ழக்­கி­ழ­மை­யும் வெள்­ளிக்­கிழமை­யும் நாடா­ளு­மன்ற உரி­மைக் குழு­வி­டம் சாட்­சி­யம் அளித்­த­னர்.

தொண்­டூ­ழி­ய­ரான யுதிஷ்த்ரா நாதன் வெள்­ளிக்­கி­ழமை சாட்­சியமளித்­தார். திரு­வாட்டி கானின் முன்­னாள் நாடா­ளு­மன்ற உத­வி­யா­ள­ரான லிம் ஹங் லிங் வியா­ழக்­கி­ழமை சாட்­சி­யம் அளித்­தார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

தான் பொய் சொன்­னது சொன்னபடியே இருக்­கட்­டும் என்று கட்­சித் தலை­வர்­கள் தன்­னி­டம் கூறி­ய­தாக திரு­வாட்டி கான் உரிமைக் குழு­வி­டம் அளித்த சாட்­சி­யத்­தில் கூறினார். திரு­வாட்டி ரயீசா கட்­சி­யில் இருந்தும் செங்­காங் குழுத்­தொ­குதி உறுப்­பி­னர் பத­வி­யிலிருந்­தும் வில­கி உள்ளார்.