கொரோனா கட்டுப்பாடுகளோடு தைப்பூசத் திருவிழா 2022

2 mins read
dafa3d6c-eb5a-485f-aa4c-f035c7606491
-

வரு­டாந்­திர தைப்­பூ­சத் திரு­விழா அடுத்த ஆண்டு தொடர்ந்து இரண்­டாம் முறை­யாக கொவிட்-19 கட்­டுப்­பா­டு­க­ளு­டன் நடை­பெ­றும்.

அடுத்த தைப்­பூ­சம் ஜன­வரி 18ஆம் தேதி செவ்­வாய்க்­கி­ழ­மை­கொண்­டா­டப்­படும்.

கொவிட்-19க்கு முன்பு, பக்­தர்­கள் பால்­கு­டம், காவ­டி­கள் ஏந்தி சிராங்­கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப் பெரு­மாள் கோயி­லிலி­ருந்து தேங் ரோடு அருள்­மிகு தெண்­டா­யு­த­பாணி கோயி­லுக்குப் பாத ஊர்­வ­ல­மாக செல்வது வழக்­கம்.

ஆனால், இந்த ஆண்­டில் கொவிட்-19 தொடர்­பான கட்­டுப்­பா­டு­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­தால், தைப்­பூ­சத் திரு­விழா­வில் பல மாற்­றங்­கள் கொண்டு வரப்­பட்­டன. அதே­போல், அடுத்த ஆண்டு தைப்­பூ­சத் திரு­வி­ழா­விலும் கட்­டுப்­பா­டு­கள் நடை­முறை­யில் இருக்­கும்.

சிராங்­கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவா­சப் பெரு­மாள் கோயிலில் இ­ருந்து தேங் ரோடு அருள்­மிகு தெண்­டா­யு­த­பாணி கோயி­லுக்குப் பாத ஊர்­வ­ல­மாக செல்வது அடுத்த ஆண்டு இடம்­பெ­றாது. திரு­விழா பிரார்த்­தனை­கள் தெண்­டா­யு­த­பாணி கோயி­லுக்­குள் மட்­டும்­தான் இடம்­பெ­றும்.

அந்த வகையில் பால்­கு­டப் பிரார்த்­த­னை­கள் மட்­டுமே இடம்­பெ­றும். கோயி­லில் தயா­ரிக்­கப்­பட்ட பால்­கு­டங்­கள் மட்­டும்­தான் பிரார்த்­த­னைக்­குப் பயன்­ப­டுத்­தப்­படும். பால்­கு­டம் எடுக்­கும் பக்­தர்­கள் அதற்­கான நேரத்தை முன்­கூட்­டியே இணை­யம் வழி பதிந்து­கொள்ள வேண்­டும். பால்­கு­டம் எடுப்­போ­ரு­டன் ஒரு­வர் மட்­டுமே செல்ல அனு­ம­திக்கப்படும்.

சுவாமி தரி­ச­னம் செய்ய விரும்­பும் பக்­தர்­களும் அதற்­கான நேரத்­தை­யும் முன்­கூட்­டியே இணை­யம் வழி பதிந்­து­கொள்ள வேண்­டும்.

இணை­யத்­தில் பதியப்படும் விவ­ரங்­கள் விரை­வில் வெளி­யிடப்­படும். தைப்­பூ­சத் திரு­வி­ழா­வில் பங்­கேற்­கும் பக்­தர்­களும் இதர பொது­மக்­களும் கட்­டா­ய­மாகத் தடுப்­பூசி போட்­டி­ருக்க வேண்­டும்.

முதி­ய­வர்­களும் சிறார்களும் தைப்­பூ­ச வி­ழா­வின் நேரடி ஒளி­பரப்பை வீட்­டில் இணை­யத்­தில் கண்டு அருள்பெறு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­ப­டுகிறார்­கள்.