பாயர் மருந்து நிறுவன ஆலை சிங்கப்பூரில் அமையக்கூடும்

2 mins read
8622587e-daae-4629-99cb-08fc5a5f7d9f
-

ஜெர்­ம­னி­யின்­ உ­ல­கப் புகழ்­பெற்ற பன்­னாட்டு மருந்து தயா­ரிப்பு நிறு­வ­ன­மான பாயர் ஏஜி, இப்­போது நடுக்­கு­வாத நோயைக் குணப்­ப­டுத்த உயி­ரணு, மர­பணு சிகிச்­சையை உரு­வாக்கி வரு­கிறது. அதற்கு ஆத­ர­வாக சிங்­கப்­பூ­ரில் புதிய உற்­பத்தி ஆலையை அந்த நிறு­வ­னம் அமைக்­கக்­கூ­டும் என்று தெரியவந்துள்ளது.

உயி­ர­ணு­வில் காணப்­படும் ஒரு­வகை ரிபோ­நி­யூக்­லிக் அமில (எம்­ஆர்­என்ஏ) மூலக்­கூற்­றைக் கொண்டு தயா­ரிக்­கப்­படும் தடுப்­பூசி மருந்­து­கள், சிகிச்சைகள் சம்பந்தப்பட்ட புதிய நிறு­வ­னங்­களு­டன் பங்­கா­ளித்­துவ உறவை ஏற்படுத்­திக்­கொள்­ளும் வாய்ப்பு பற்­றி­யும் தான் ஆராய்ந்து வரு­வ­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸி­டம் பாயர் ஏஜி தெரி­வித்­துள்­ளது.

பயிர்­கள் தொடர்­பான அறி­வியல் துறை­யில் சிங்­கப்­பூ­ரின் அர­சாங்க முத­லீட்டு நிறு­வ­ன­மான தெமா­செக்­கு­டன் பாயர் நிறு­வ­னம் பங்­கா­ளித்­துவ தொழில் உறவை ஏற்­ப­டுத்­திக் கொண்­டுள்­ளது.

இதற்கு மேலும் அது சிங்­கப்­பூ­ரில் புதிய திட்­டங்­களில் ஈடு­பட இருக்­கிறது என்று அந்த நிறு­வனத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி வார்­னர் பாவ்­மான் பேட்டியில் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ருக்­கா­க­வும் பரந்த ஆசி­யான் வட்­டா­ரத்­திற்­கா­க­வும் தொழில்­களை சிங்­கப்­பூ­ரில் மேலும் எப்­படி விரி­வு­ப­டுத்­தலாம் என்­பது பற்றி தொடர்ந்து தாங்­கள் விவா­தித்­து­ வ­ரு­வ­தாக அவர் கூறினார்.­

நடுக்­கு­வா­தம் (பார்­கின்­சன்) என்­பது மனித உட­லின் மத்­திய நரம்பு மண்­ட­லத்­தில் ஏற்­படக்­ கூடிய பாதிப்­பு­க­ளால் உருவாகும் நோய். உலக அள­வில் 10 மில்லி­ய­னுக்­கும் மேற்­பட்ட மக்­கள் அந்த நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

அந்த நோயைக் குணப்­ப­டுத்த பாயர் நிறு­வ­னம் சிகிச்சை முறையை உரு­வாக்கி வரு­கி­றது.

அந்த முறை­கள் இப்­போது அமெ­ரிக்­கா­வி­லும் கன­டா­வி­லும் ஆய்­வுக் கூடங்­களில் ஏழு நோயாளிக­ளி­டம் பரி­சோ­திக்­கப்­பட்டு வரு­கின்­றன. அவை இந்த ஆண்டு முடி­வில் நிறை­வ­டை­யும்.

நிறுவ­னம் அடுத்த முயற்­சியை எடுக்க அப்­போது தக்க தரு­ணம் ஏற்­படும். கூடு­த­லான உற்­பத்தி ஆலையை எங்கு அமைக்­க­லாம் என்­பது பற்றி அப்­போது ஆரா­ய­வேண்டி இருக்­கும் என்று பாயர் நிறு­வன நிர்­வாகி தெரி­வித்­தார்.