ஓமிக்ரான் தொற்றைக் கண்டறிய உள்ளூர் பரிசோதனைக் கருவி

2 mins read
9b1a6257-1478-41f9-8780-c2ca83e8c1af
பயோஅக்கியூமன் குளோபல் நிறுவனத்தின் உற்பத்தித் துறை நிர்வாகி அன்-நிஷா கன்னாம், 24, காலாங்கில் இருக்கும் பரிசோதனைக் கூடத்தில் ஓமிக்ரான் தொற்றைக் கண்டுபிடிக்கும் பரிசோதனை நடத்துகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உரு­மா­றிய கொவிட்-19 ஓமிக்­ரான் தொற்­றைக் கண்­ட­றி­வ­தற்­கான சிங்­கப்­பூ­ரின் முத­லா­வது பிசி­ஆர் பரி­சோ­த­னைக் கரு­வியை பயோ அக்கியூமன் குளோபல் (BioAcumen Global) என்ற உள்­ளூர் நிறு­வ­னம் அறிமுகப்படுத்தி இருக்­கிறது.

'பயோஏ ஓமிக்­ரான் கண்­ட­றி­யும் கருவி' என்று குறிப்­பி­டப்­படும் அந்­தப் புதிய சாத­னம், குறிப்­பாக ஓமிக்­ரான் தொற்றைக் கண்­டு­பி­டிக்கும்.

இதர உரு­மா­றிய கிரு­மித்­தொற்று இருக்­கி­றதா என்­ப­தை­யும் அந்­தக் கருவி மூலம் தெரிந்­து­கொள்­ள­லாம். அந்­தப் பரி­சோத னைக் கரு­வி­யைப் பயன்­ப­டுத்­தும் ஒரு­வ­ருக்கு மூன்று முடி­வு­களில் ஏதே­னும் ஒன்று கிடைக்­கும்.

கொவிட்-19 தொற்று மற்­றும் ஓமிக்­ரான் தொற்று உள்­ளது;

கொவிட்-19 தொற்று உள்­ளது, ஓமிக்­ரான் தொற்று இல்லை; கொவிட்-19 தொற்று இல்லை, ஓமிக்­ரான் தொற்று இல்லை ஆகிய மூன்று முடி­வு­களில் ஏதே­னும் ஒரு முடிவு மூலம் தொற்று நில­வ­ரத்தை தெரிந்­து­கொள்­ள­லாம்.

இப்­போது ஓமிக்­ரான் தொற்று இருக்­கி­றதா என்­ப­தைக் கண்­ட­றிய பிசி­ஆர் கருவி பரி­சோ­தனை மட்டும் போதாது. ஓமிக்­ரான் தொற்று இருக்­கி­றதா என்­பதைத் திட்­ட­வட்­ட­மாக உறு­திப்­ப­டுத்த தொடர்ந்து மர­பணு பரி­சோ­த­னை­யும் நடத்த வேண்­டும். இதற்கு கூடு­த­லாக ஒரு நாள் பிடிக்­கும்.

புதி­தாக வெளி வந்­துள்ள கருவி மூலம் பரி­சோ­தனை நடை­மு­றையை வேக­மாக நடத்த முடி­யும் என்­றும் இந்­தப் பரி­சோ­தனை மூலம் குளிர்­சா­தன ஏற்­பாடு தேவை இல்லை என்­றும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

இந்­தப் புதிய பரி­சோ­தனைக் கரு­வி­களைப் பெரி­ய­ள­வில் தயா­ரிக்க உற்­பத்தி நட­வ­டிக்­கை­கள் தொடங்கி இருக்­கின்­றன.

இது உள்­ளூ­ரி­லும் இந்த வட்­டா­ரத்­தி­லும் இப்­போ­தைய சூழ்­நிலை­யில் மிக உத­வி­யாக இருக்­கும் என்று புதிய கரு­வியை உரு­வாக்கி இருக்­கும் குழு­வி­னர் நம்­பு­கி­றார்­கள்.