2022ல் தயாராகும் மறுவாழ்வு இல்லம்

1 mins read
044ab08e-c740-4885-a741-f981670b9a00
-

பெண் குற்றவாளிகள் தங்கி மறுவாழ்வு பயிற்சி பெறுவதற்கான சமயச்சார்பற்ற முதலாவது இல்லம் அடுத்த ஆண்டு இரண்டாம் பாதியில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏறத்தாழ 30 குற்றவாளி களுக்கு அந்த இல்லம் இடமளிக்கும் என்று சிங்கப்பூர் முஸ்லிம் மாதர் சங்கம் அறிக்கை கூறியது.

'ரைஸ் அபவ் மறுவாழ்வு இல்லம்' என்ற அந்த இல்லம் திறக்கப்படும் போது சிங்கப்பூரில் சிறைச் சாலைத் துறை மாதிரியிலான ஒன்பது மறுவாழ்வு இல்லங் கள் செயல்படும். இப்போது பெண்களுக்கான 'தி டர்னிங் பாயிண்ட்' என்ற ஒரு மாறுவாழ்வு இல்லம் மட்டுமே செயல்படுகிறது.